62 ஆண்டு பாரம்பரியத்தைக் கடைபிடிக்க 2 கிலோ நல்லெண்ணையைக் குடித்த பழங்குடியின பெண்கள்...

62 ஆண்டு பாரம்பரியத்தைக் கடைபிடிக்க 2 கிலோ நல்லெண்ணையைக் குடித்த பழங்குடியின பெண்கள்...

பாரம்பரியம் என்று வந்தாலே, அது இந்தியர்களின் பாரம்பரிய விழாக்கள் தான் முன்னணியில் இருக்கும். விநோதமான வித்டியாசமான பல வகையான பாரம்பரிய விழாக்கள் கொண்டாடப்படும் நிலையில், 62 ஆண்டுகால பாரம்பரொயத்தைக் காக்கும் வகையில், பழங்குடியின பெண்கள் சுமார் 2 கிலோக்கும் மேற்பட்ட நல்லெண்ணெய்யை (எள் எண்ணெய்) குடித்துள்ளனர்.

அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள நார்னூர் மண்டல் தலைமையகத்தில் நடைபெறும் வருடாந்த ஐந்து நாட்கள் நடைபெறும் காமதேவ் ஜாதராவின் 62 ஆண்டுகால பாரம்பரியத்தை ஒட்டி, பழங்குடியினப் பெண் ஒருவர் அமைதி மற்றும் செழிப்புக்காக இரண்டரை கிலோ எள் எண்ணெயைக் குடித்தார்.

மேலும் படிக்க | கொடைக்கானலில் நடந்த சிறுதானிய உணவு திருவிழா...

பவுர்ணமி அன்று நடத்தப்படும் இந்த பூஜையானது, புஷிய மாதத்தின் மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது. மகாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டம், ஜீவிதி தாலுகாவின் கோடேபூர் கிராமத்தைச் சேர்ந்த தொடசம் பரம்பரைக்கான சிறப்பு பூஜையான இதில், தந்தை வழி சகோதரிகள் இணைந்து செய்யும் பூஜை தான் இது.

இதில், சகோதரிகளில் ஒருவர் பெரிய அளவிலான பாத்திரத்தில் சுமார் 2 கிலோவுக்கும் மேலான வீட்டிலேயே செய்யப்பட்ட எள் எண்ணெயை குடிப்பது வழக்கமாக வைத்திருக்கின்றனர். இந்த எண்ணெயானது சுமார் 3 ஆண்டுகள் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

காமதேவனை வழிபடும் இந்த தொடசம் பரம்பரையினர் இந்த பூஜையை சுமார் 62 ஆண்டுகாலமாக வழிபடுவதாகக் கூறப்படுகிறது. ஒரு பெண் இத்தனை கிலோ நல்லெண்ணெயை குடித்த போட்டோக்கள் இணையத்தில் படு பயங்கரமாக வைரலாகி வருகிறது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | ‘வாரிசு’ பட கொண்டாட்டத்தின் போது பலூன் வெடித்து விபத்து...