‘வாரிசு’ பட கொண்டாட்டத்தின் போது பலூன் வெடித்து விபத்து...

விஜயின் வாரிசு படத்தின் வெளியீட்டு கொண்டாட்டத்தில் ஹீலியம் பலூனில் பட்டாசு பட்டு தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

‘வாரிசு’ பட கொண்டாட்டத்தின் போது பலூன் வெடித்து விபத்து...

விஜயின் ‘வாரிசு’ படத்தின் வெளியீட்டை ஒட்டி ரசிகர்கள் படு பயங்கரமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த் அவகையில், நடிகரின் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம், பூ மாலை, அன்னதானம் ரத்த தானம் என பல வகையான கொண்டாட்டங்கள் இருந்தாலும், படம் வெளியாகும் தியேட்டர்களில் வெடிக்கும் வெடிக்களுக்கு அத்தனை ரசிகர் கூட்டம் இருக்கிறது.

அந்த வகையில், வாரிசு பட கொண்டாட்டங்களில், வெடிக்கப்பட்ட ஒரு வெடியால் விபத்து ஏற்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அஜித் மற்றும் விஜய் என்ற உச்ச நட்சத்திரங்களின் படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் மிகவும் அதிகமாகவே இருக்கும் நிலையில், ஒரே நேரத்தில் இருவரது படங்களும் வெளியாகி இந்த பொங்கல் தீப்பறக்க வந்துள்ளது தான் இன்றைய உண்மை நிலையாக இருக்கிறது.

மேலும் படிக்க | துணிவு- வாரிசு ரிலீஸ்....கிழிக்கப்பட்ட பேனர்கள்....

அந்த வகையில், சென்னை பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் ஈவிபி சினிமாஸில் அஜித் மற்றும் விஜய் ஆகியோரின்  திரைப்படங்கள் ஒரே நாளில் இன்று வெளியானது. இதில் தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் கட் அவுட் பேனர் வைத்து பட்டாசு வெடித்து பாலாபிஷேகம் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை 11 மணி அளவில் ஈவிபி சினிமாஸில் விஜய் அஜித் ஆகிய ரசிகர்கள் கட் அவுட்டிற்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திரையரங்கத்தின் வெளியே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஹீலியம் கேஸ் பலூன் மீது கொண்டாட்டத்திற்காக வெடிக்கப்பட்ட பட்டாசு எதிர்பாராத விதமாக பட்டு கேஸ் பலூன் வெடித்து, பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

மேலும் படிக்க | முதல்ல - துணிவா... வாரிசா? சண்டை போட்ட ரசிகர்கள்... திண்டாடிய தியேட்டர்

உடனடியாக சுதாரித்துக் கொண்ட விஜய் ரசிகர்கள் யாருக்கும் காயங்கள் ஏற்படாதவாறு அங்கிருந்து அனைவரையும் அப்புறப்படுத்தினர் பின்னர் இரு ரசிகர்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீசார் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட ஹீலியம் கேஸ் பலூனை அங்கிருந்து வெளியேற்றினர்.

அதன் பின்னர் பெருவிபத்து தவிர்க்கப்பட்டதை அடுத்து துணிவு படம் பார்க்க வந்த அஜித் ரசிகர்கள் இணைந்து விஜய் ரசிகர்களும் ஒன்றாக இணைந்து இருவரும் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த தீ விபத்தின் போது பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியல் வெளியீடு...10 இந்திய திரைப்படங்கள் தேர்வு...எந்தெந்த படங்கள் தெரியுமா?