ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியல் வெளியீடு...10 இந்திய திரைப்படங்கள் தேர்வு...எந்தெந்த படங்கள் தெரியுமா?

ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியல் வெளியீடு...10 இந்திய திரைப்படங்கள் தேர்வு...எந்தெந்த படங்கள் தெரியுமா?

ஆஸ்கர் குழுவினர் வெளியிட்டுள்ள பரிந்துரை பட்டியலில் இரவின் நிழல், ஆர்.ஆர்.ஆர், காந்தாரா உள்பட மொத்தம் 10 இந்திய படங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆஸ்கர் விருதுக்கு தேர்வான படங்களின் பட்டியல் வெளியீடு:

சினிமாத்துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது, ஆண்டுதோறும் சிறந்த படங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ளது. அதன்படி, ஆஸ்கர் விருதுக்காக போட்டியிட்ட படங்களில் இருந்து சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்ட 301 படங்களின் பரிந்துரை பட்டியலை ஆஸ்கர் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்திய திரைப்படங்கள் தேர்வு:

அந்த பட்டியலில், 10 இந்திய திரைப்படங்கள் தேர்வாகி உள்ளது. அதன்படி, ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர். ஆர் திரைப்படமும், ரிஷ்ப ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படமும், பார்த்திபனின் இரவின் நிழல் படமும், மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி படமும் தேர்வாகி உள்ளது. 

இதையும் படிக்க: சட்டப்பேரவையின் 2ம் நாள் கூட்டத்தொடர்...சபாநாயகர் வாசித்தது என்ன?

தொடர்ந்து, கங்குபாய் கத்தியவாடி மற்றும் தி காஷ்மீர் பைல்ஸ் ஆகிய இரண்டு இந்தி படங்களும், இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட குஜராத்தி படமான தி செல்லோ ஷோ படமும் இந்த பரிந்துரை பட்டியலில் இடம்பெற்று உள்ளன. 

மேலும் மீ வசந்த்ராவ், தி நெக்ஸ்ட் மார்னிங், விக்ராந்த் ரோனா ஆகிய இந்திய படங்களும் அந்த லிஸ்ட்டில் இடம்பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.