சீர்காழியில் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்கான புதிய கட்டிடம்

சீர்காழியில் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்கான புதிய கட்டிடம்

சீர்காழி அரசு பொது மருத்துவமனையில் 90 லட்சம் மதிப்பில் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்கான புதிய கட்டிடம் திறப்பு விழா சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு 200க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் தங்குவதற்கு எவ்வித வசதியும் இல்லாமல் வாகனம் நிறுத்துமிடம் மற்றும் மரத்தின் நிழல்களில் தங்கும் அவல நிலை இருந்து வந்தது.

இதனையடுத்து நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் தங்குவதற்கான புதிய கட்டிடம் 90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார். சீர்காழி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அதிகாரி, மருத்துவர் அருண் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் நகராட்சி ஆணையர் வாசுதேவன் சீர்காழி நகர்மன்ற தலைவி துர்கா பரமேஸ்வரி மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.