மாயமான கல்லூரி மாணவிகள்... நெல்லை சரக டி ஐ ஜியிடம் பெற்றோர் மனு...

மாயமான கல்லூரி மாணவிகள்... நெல்லை சரக டி ஐ ஜியிடம் பெற்றோர் மனு...

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அச்சுதன்- லதா தம்பதியரின் மகள் கார்த்திகா 19. இவர்  சாத்தான்குளத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் .

இதே போல சாத்தான்குளம் அருகே உள்ள கொழுந்தட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் எப்சி 21 இவரும் கார்த்திகாவும் சாத்தான்குளத்தில் உள்ள  கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றனர். தோழிகளான இவர்கள் இருவரும்   கடந்த 23ஆம் தேதி வங்கிக்கு செல்வதாக கூறிச் சென்றனர். பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை இன்றோடு ஒரு வாரம் ஆகிறது. இந்நிலையில் கார்த்திகாவின் பெற்றோர் மற்றும் எப்சிபாவின் உறவினர்கள் இருவரும் நெல்லையில் உள்ள டி ஐ ஜி அலுவலகத்தில் மாயமான இரண்டு கல்லூரி மாணவிகளையும் மீட்டு தர கோரி மனு அளித்தனர்.காவல் நிலையத்தில் புகாரளித்தும் போலீசார் உரிய விசாரணை நடத்தாமல் கால தாமதம் செய்வதாக குற்றச்சாட்டு வைக்கின்றனர். 

பின்னர் அவர்கள் இருவருமே வீடு திரும்பாததால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து இருவரின் பெற்றோரும் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில் போலீசார் சரிவர விசாரணை நடத்தாமல் காலதாமதம் செய்து வருவதாக கூறப்படுகிறது இந்நிலையின் கார்த்திகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று நெல்லை ஹைகிரவுண்ட் பகுதியில் உள்ள நெல்லை சரக டிஐஜி அலுவலகத்தில் மாயமான இரண்டு கல்லூரி மாணவிகளையும் மீட்டு தர கோரி மனு அளித்தனர். இதுகுறித்து கார்த்திகாவின் சகோதரர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கல்லூரியில் தேர்வுக்காக விடுமுறை விட்டுள்ளனர். சம்பவத்தன்று இருவரும் வங்கிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றனர், ஆனால் வீடு திரும்பவில்லை காவல் நிலையத்தில் புகாரளித்தபோது மறுநாள் தான் வழக்கே பதிவு செய்தனர்.

இருவரும் மயமாகி ஒரு வாரம் ஆன நிலையில் போலீசார் சரிவர விசாரிக்காமல் காலதாமதம் செய்கின்றனர் .எனவே தற்போது டி ஐ ஜி அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம் என்று தெரிவித்தார். கல்லூரி மாணவிகள் இருவரும் ஒரே நேரத்தில் மாயமான நிலையில் அது தொடர்பான வழக்கை போலீசார் இழுத்தடிப்பதாக கூறி பெற்றோர்கள் டி ஐ ஜியிடம் முறையிட்டிருப்பது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.