கேரளாவில் மீன்பிடி தடைகாலம்; நாகையில் குவிந்த கேரள வியாபாரிகள்!

கேரளாவில் மீன்பிடி தடைகாலம்; நாகையில் குவிந்த கேரள வியாபாரிகள்!

கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் கேரள வியாபாரிகள் மீன்களை வாங்க தமிழ்நாட்டில் குவிந்து வருகின்றனர்.

கேரள மாநிலத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் அதிக அளவில் கேரள மீன் வியாபாரிகள் மீன்கள் வாங்குவதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக முகாமிட்டு வருகின்றனர். இன்று காலையிலேயே நாகை மீன்பிடி துறைமுகத்தில் குவிந்த கேரள வியாபாரிகள், மீன்களை வாங்கி கனரக வாகன மூலம் கேரளாவுக்கு ஏற்றிச் சென்றனர். இதில் மீன்கள் குறைந்த அளவே கிடைத்துள்ளதாகவும் விலை சற்று கூடுதலாக உள்ளதாகவும் கேரளா வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதே போல் திருச்சி தஞ்சை திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மீன் வியாபாரிகள் மீன்கள் வாங்க வந்துள்ள நிலையில் நாகை மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மீன் பிரியர்கள் ஏராளமானோர் துறைமுகத்தில் குவிந்து உள்ளதால் நாகை மீன்பிடித் துறைமுகம் களைகட்டி உள்ளது.

இதையும் படிக்க:"நல்ல படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த அனைவருக்கும் நன்றி" உதயநிதி ஸ்டாலின்!