சூரைக்காற்றில் கவிழந்த படகு; நாகை மீனவர் மாயம்!

சூரைக்காற்றில் கவிழந்த படகு; நாகை மீனவர் மாயம்!

நாகையில் நேற்று இரவு ஏற்பட்ட கடல் சீற்றத்தில் சிக்கி பைபர் படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் மாயமாகியுள்ளார்.

நாகப்பட்டினம், கீச்சாங்குப்பத்தை சேர்ந்தவர் செல்ல குஞ்சு. இவருக்கு சொந்தமான பைபர் படகில் இவரது மகன் ரகு , நாகை சேவபாரதி சுனாமி குடியிருப்பை சேர்ந்த சக்திவேல், மயிலாடுதுறை மாவட்டம் பழையாறு மடவமேடு கிராமத்தை சேர்ந்த விக்கி (17) ஆகிய மூன்று பேர் நேற்று அதிகாலை நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். 

5 நாட்டிக்கல்  தொலைவில் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது நேற்று இரவு ஏற்பட்ட சூரைக்காற்றில் சிக்கி பைபர் படகு கவிழ்ந்தது. இதில் படகிலிருந்த மூன்று மீனவர்கள் கடலில் சுமார் 5 மணி நேரம் தத்தளித்தனர். அப்போது அங்கு இன்று அதிகாலை மீன் பிடிக்க சென்ற கீச்சாங்குப்பத்தை சேர்ந்த பாக்கியராஜ்  என்பவருக்கு சொந்தமான பைபர் படகு மூலம் சக்திவேல், விக்கி ஆகியோரை மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இவர்கள் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காணாமல்போன ரகுவை கீச்சாங்குப்பம் கிராம மீனவர்கள் 2 விசைப்படகில் சென்று தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: "அரசு மருத்துவமனைகளில் மருந்துகளுக்கு சீட்டு வழங்காததால், உயிரிழப்பு ஏற்படுகிறது" உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல்!