வரும் 10ஆம் தேதி இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை.. எங்க தெரியுமா..? பயன் தருமா?

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வரும் 10ஆம் தேதி துருக்கியில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

வரும் 10ஆம் தேதி இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை.. எங்க தெரியுமா..? பயன் தருமா?

ரஷ்யா - உக்ரைன் இடையே பெலாராஸ் நாட்டில் 3-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. கீவ் உள்ளிட்ட 4 நகரங்களில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. முதல் இரு கட்ட பேச்சுவார்த்தையில் மிகப்பெரிய முன்னேற்றம் இல்லாத நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இதனிடையே, இருநாடுகளுக்கு மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், ரஷ்யா வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் திமிட்ரோ குலேபா ஆகியோர் வரும் 10ஆம் தேதி துருக்கியில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் 13 வது நாளாக தொடர்ந்து நீடித்துவரும் நிலையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.