இந்தியாவில் சிக்கிக் கொண்ட என் உறவுகளைக் காப்பாற்றுங்கள்!!!- அமைச்சரிடம் கோரிக்கை!

இந்தியாவில் பிடிபட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் இலங்கையில் இருந்து கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் சிக்கிக் கொண்ட என் உறவுகளைக் காப்பாற்றுங்கள்!!!- அமைச்சரிடம்  கோரிக்கை!

பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கமுடியாமல் தமது குடும்பத்தினை எவ்வாறாயினும் பாதுகாத்துக்கொள்வதற்காக நாட்டில் இருந்து வெளிநாடு செல்வதற்காக இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் பெங்களுரில் வைத்து கைதுசெய்யப்பட்ட 38 பேரையும் விடுவிக்குமாறு அவர்களது உறவினர்கள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

கடந்த 10.06.2021 அன்று இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில் வைத்து இலங்கையினை சேர்ந்த 38 பேரை இந்திய மத்திய புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளார்கள்

இவர்கள் வடக்கு கிழக்கு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்பு சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்லமுற்பட்டதாக கைதுசெய்து கர்நாடகாக பொலீசாரிடம் ஒப்டைத்ததில் இருந்து இதுவரை தமது பிள்ளைகள் கணவன்மார்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாத நிலையில் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம், வெளிநாட்டு அமைச்சு மற்றும் இந்தியாவில் உள்ள இலங்கை தூதரகங்களுக்கு தெரியப்படுத்தியும் தமது உறவுகளுக்க என்ன நடந்து என்பது இதுவரை தெரியில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இன்னிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வைத்து 38 போரின் உறவினர்களும் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தமது உறவுகளை இந்தியா விடுதலை செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள். கைது செய்யப்பட்ட போது அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அதற்கு பின்னர் என்ன நடந்து எங்க இருக்கின்றார்கள் எப்படி இருக்கின்றார்கள் என்ற எந்த தகவலும் தொடர்பும் தங்களுக்கு இல்லை என பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்தியாவின் கருநாடாக பெங்களுர் பொலீசாரல் கைது செய்யப்பட்ட தமது உறவுகளை விரைவில் விடுதலைசெய்ய அனைத்து தரப்பினரும் ஆவண செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இலங்கையில் ஏற்பட்டுள்ளபொருளாதார நெருக்கடி காரணமாக அதிகளவான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றார்கள் சட்டவிரோதமான முறையில் படகுகளில் செல்பவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.