கொள்ளையர்களை போல் செருப்பை திருடிச்சென்ற பூனை: கையும் களவுமாக பிடிபட்டது

சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து செருப்புகளை திருடி சென்ற பூனை சிசிடிவி கேமராவின் மூலம் சிக்கியது.

கொள்ளையர்களை போல் செருப்பை திருடிச்சென்ற பூனை: கையும் களவுமாக பிடிபட்டது

சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து செருப்புகளை திருடி சென்ற பூனை சிசிடிவி கேமராவின் மூலம் சிக்கியது.

சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து செருப்புகள் காணாமல் போவது தொடர்கதையாகி வந்துள்ளது. இதையடுத்து குடியிருப்பில் இருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்த போது திருட்டு வேலையில் ஈடுபட்டது பூனை என்பது தெரியவந்தது.

நள்ளிரவில் அடுக்குமாடி குடியிருக்குள் நுழையும் பூனை யாராவது இருக்கிறார்களா என சுற்றம் முற்றும் பார்த்துவிட்டு செருப்பை அலேக்காக வாயில் கவ்வுக்கொண்டு செல்கிறது.

பூனை திருடிய அனைத்து செருப்புகளும் Vans, Adidias மற்றும் Puma போன்ற பிரபல பிராண்ட் செருப்புகள் என குடியிருப்புவாசிகள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பான போட்டோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.