கைக்குழந்தையுடன் ரிக்‌ஷா ஓட்டும் நபர்!!! மனதை உருக்கும் வைரல் வீடியோ!!!

ஜபல்பூரில் ஒருவர், தனது கைக்குழந்தையுடன் ரிக்‌ஷா ஓட்டுவது வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், மனதை உருகுவதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

கைக்குழந்தையுடன் ரிக்‌ஷா ஓட்டும் நபர்!!! மனதை உருக்கும் வைரல் வீடியோ!!!

ஒரு குடும்பத்தை நடத்துவது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அதுவும் குடும்ப தலைவர் என்றால், இருப்பதிலேயே கடினமானது அது தான். இந்நிலையில், ஒருவர், தனது கைக்குழந்தையுடன் ரிக்‌ஷா ஓட்டி சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். இதன் வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

ஜபல்பூரைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் தனது குடும்பத்தை பொருளாதார ரீதியாக ஆதரிப்பதற்காக ஒரு வேலையைப் பெறுவதற்காக ஜபல்பூருக்குச் சென்றார். ஆனால், வேலை ஏதும் கிடைக்காததால் ரிக்‌ஷா ஓட்டிக் கொண்டிருக்கிறார். அவர் வழக்கமாக தனது குழந்தையை ஒரு கையில் ஏந்தி, மற்றொரு கையால் ரிக்ஷாவின் கைப்பிடியை வைத்திருப்பார். இடையிடையே குழந்தை தூங்கினாலும், தந்தை கடுமையாக உழைத்து வாழ்க்கை நடத்துகிறார். இவர் செய்யும் காரியமானது, பலரை வியக்க வைத்ததோடு, சோசியல் மீடியாக்களிலும் பரவி அனைவரது கவனத்தை பெற்றுள்ளது. மேலும், அவருக்கு பணம் திரட்ட விரும்புவதாக பல சோசியல் மீடியா பயணிகள் விரும்புவதாக பதிவிட்டு வருகின்றனர்.