யூடியூப், ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் நண்பர்கள் தந்த பரிசு ..! தாயை இழந்த குடும்பத்திற்கு சோசியல் ஃ பட்னிங்கில் புதிய வீடு..!

யூடியூப்,   ஃபேஸ்புக்,  வாட்ஸ் ஆப் நண்பர்கள் தந்த பரிசு ..!  தாயை இழந்த குடும்பத்திற்கு சோசியல் ஃ பட்னிங்கில் புதிய வீடு..!

தாயை இழந்து, இருக்க வீடு கூட இல்லாமல் வளர்ந்து வந்த குழந்தைகளுக்கு சமூக வலைத்தளங்கள் மூலமாக நிதி திரட்டி வீடு கட்டி கொடுத்திருக்கும் நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட கருப்பட்டிபட்டி ஊராட்சி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு விஜய், கார்த்திக் என்ற இரண்டு மகன்களும் நித்யா என்ற ஒரு மகளும் உள்ளனர். 

விஜய் பத்தாம் வகுப்பும்,  கார்த்திக் ஆறாம் வகுப்பும், நித்யா நான்காம் வகுப்பும்  அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் விஜயா கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் மதியழகன் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்தும் கிடைக்கும் கூலி வேலைகளை செய்தும் தனது இரண்டு மகன் மற்றும் ஒரு மகளை பராமரித்து வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் இவர்கள் அந்த பகுதியில் இருப்பதற்கு வீடு கூட வீடின்றி பாலடைந்த கூரை கொட்டகையில் வசித்து வந்த நிலையில் யாரேனும் உதவி செய்வார்களா என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்தனர்.

இந்நிலையில் களபம் கிராமத்தைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞரும் சமூக ஆர்வலருமான இளவரசன் பெற்றோர்களை இழந்து தவிக்கும் மாணவர்களுக்கும் ஏழ்மையானவர்களுக்கும் சமூக வலைதளத்தில் உள்ள நண்பர்கள் மூலம் நிதி திரட்டி பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் இவர், மதியழகன் மற்றும் அவரது 3 குழந்தைகளும் வீடின்றி தவிப்பதை அறிந்து உடனடியாக யூடியூப் முகநூல் அதான் வாட்ஸ் அப் பல்வேறு சமூக வலைதளங்கள் மூலம் மதியழகன் குடும்பத்திற்கு வசிப்பதற்கு வீடு கட்டிக் கொடுத்து உதவி செய்ய வேண்டும் என்று கூறி நிதி திரட்டினார். 

இதில் முகம் தெரியாத நபர்கள் நிதியை வாரி வழங்கினர். அதன்படி, கடந்த ஐந்து மாத காலமாக ரூபாய் 3.50 லட்சம் மதிப்பில் இரண்டு சதுரத்திற்கு தார்ஸ் வீடு கட்டப்பட்டு அந்த வீட்டிற்கு தேவையான வீட்டு உபயோகப் பொருட்களும் வாங்கப்பட்டது. நிலையில் அந்த வீடு மதியழகன் குடும்பத்திற்கு ஒப்படைக்கப்பட்டு கிரகப்பிரவேசம் நடைபெற்றது. 

மேலும் அந்த வீட்டிற்கு " யூடியூப் முகநூல் வாட்ஸ் அப் நண்பர்கள் தந்த பரிசு " என்று பெயர் சூட்டப்பட்டு முகம் தெரியாத நபர்கள் செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செயல் பலரிடம் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

இதையும் படிக்க     | காலணி அணிந்து வந்த மாற்றுத்திறனாளி பெண்.. கீழே தள்ளி விட்ட விஏஓ!!