எச்.ராஜாவுக்கு அனுப்பப்பட்டது சம்மனா? அல்லது வாரண்டா? நீதிமன்றம் கேள்வி

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் எச்.ராஜாவுக்கு அனுப்பப்பட்டது சம்மனா? அல்லது வாரண்டா? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

எச்.ராஜாவுக்கு அனுப்பப்பட்டது சம்மனா? அல்லது வாரண்டா? நீதிமன்றம் கேள்வி

போலீசாரையும், நீதிமன்றத்தையும் விமர்சித்து பேசியதாக, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் நீதிமன்றத்தில் முன்னாள் பா.ஜ.க. தேசிய செயலாளர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, காவல்துறையினர் தம்மை கைது செய்யாமல் இருக்க, எச். ராஜா முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இதனை உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரித்த போது, காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் மனுதாரர் தலைமறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மனுதாரருக்கு கீழமை நீதிமன்றம் அனுப்பியது சம்மனா அல்லது வாரண்டா? என கேள்வி எழுப்பி, மனுதாரருக்கு அனுப்பப்பட்ட கீழமை நீதிமன்ற சம்மனை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.