இங்க தடை போட்டா.. அங்க வருவோம்-ல... களை கட்டிய பட்டினப்பாக்கம்...

கனமழை காரணமாக மெரினாவில் தடை போடப்பட்டதால், பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு பொதுமக்கள் சென்றுள்ளனர்.

இங்க தடை போட்டா.. அங்க வருவோம்-ல... களை கட்டிய பட்டினப்பாக்கம்...

தென் கிழக்கு வங்க கடலில் பகுதியில் உருவான மாண்டஸ் புயல் கடந்த 9 ஆம் தேதி இரவு கரையை கடந்த நிலையில் காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து, பொது மக்கள் கடற்கரைக்கு வர கூடாது என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டிருந்தது.

புயல் கடந்தாலும், நேற்று கடல் காற்று அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் கடற்கரைகளுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என மீண்டும் தெரிவித்து, சென்னை மெரினா பட்டினம்பாக்கம் கடற்கரையில் கலங்கரை விளக்கம் அருகே தடுப்புகள் அமைத்து பொதுமக்களை உள்ளே அனுமதிக்காமல் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் படிக்க | ப்பா.. படத்துல கூட இவ்வளவு அழகா இருக்குமான்னு தெரியல...

ஆனால், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பட்டினம்பாக்கம் கடற்கரைக்கு பொது மக்கள் ஆபத்தை உணராமல் கூட்டம் கூட்டமாக இரம்பி வழிந்துள்ளனர்.

புயல் பாதிப்பு காரணமாக கடற்கரையில் உள்ள கடைகள் அனைத்தும் சேதமடைந்துள்ள நிலையில் மெரினா கடற்கரையில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கிறது. அதனால், பொதுமக்கள் பட்டினம்பாக்கம் கடற்கரைக்கு அதிக அளவில் வந்துள்ளதால் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. பட்டினம்பாக்கம் சர்வீஸ் சாலை முழுவதுமாக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | மழையால் பயிர்களில் பூச்சிகள் தெளியும் என மகிழ்ச்சியில் விவசாயிகள்...