மழையால் பயிர்களில் பூச்சிகள் தெளியும் என மகிழ்ச்சியில் விவசாயிகள்...

திருவாரூரில் தொடர் மழையால் முதன்முறையாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மழையால் பயிர்களில் பூச்சிகள் தெளியும் என மகிழ்ச்சியில் விவசாயிகள்...
Published on
Updated on
1 min read

திருவாரூர் | திருவாரூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளான விளமல் மடப்புரம் அடியக்கமங்கலம் சேந்தமங்கலம் குளிக்கரை அம்மையப்பன் தேவர் கண்ட நல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது.

அதேபோல குடவாசல் தாலுக்கா மற்றும் குடவாசல் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குடவாசல் அகர ஓகை புதுக்குடி திருக்கண்ணமங்கை காட்டூர் என்கண் மஞ்சகுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்தது. மேலும் மன்னார்குடி கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கன மழை பெய்துவருகிறது.

மாண்டஸ் புயல் வந்த பொழுதும் புயல் கரையை கடந்த பொழுதும் பெரிய அளவில் திருவாரூர் மாவட்டத்தில் மழை இல்லை ஆனால் இன்று மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கன மழை பெய்ததால் சம்பா சாகுபடி செய்த விவசாயிகள் பயிர்களில் உள்ள பூச்சி தெளியும் என்று மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com