அண்ணாமலையா..? நயினார் நாகேந்திரனா..? தமிழக பாஜகவின் புதிய தலைவர் யார்?

எல்.முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தமிழக பா.ஜ.கவின் புதிய தலைவராக அண்ணாமலை அல்லது நயினார் நாகேந்திரன் நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

அண்ணாமலையா..? நயினார் நாகேந்திரனா..? தமிழக பாஜகவின் புதிய தலைவர் யார்?
கடந்த ஆண்டு மார்ச்சில் தமிழக பா.ஜ.க. தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டார். சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.  கூட்டணியில் இடம்பெற்ற பா.ஜ. , 20 தொகுதிகளில் போட்டியிட்டு, நான்கில் வெற்றி பெற்றது. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளவும், கட்சியை பலப்படுத்தவும், தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு, தேசிய தலைமை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் முருகன் நேற்று, மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றார்.
 
இதையடுத்து, தமிழக பா.ஜ.கவின் புதிய தலைவராக, தற்போதைய தமிழக பாஜக துணைத்தலைவராக உள்ள அண்ணாமலையை நியமிக்கலாமா? அல்லது தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரனை நியமிக்கலாமா என, தேசிய தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
 
கடந்த சட்டமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்ற நிலையில், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.