பேனா நினைவு சின்னம்...! நிபுணர் குழு விதித்த நிபந்தனைகள் என்னென்ன?

பேனா நினைவு சின்னம்...!  நிபுணர் குழு விதித்த நிபந்தனைகள் என்னென்ன?

சென்னை மெரினா கடலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை போற்றும் வகையில் ரூபாய் 81 கோடி செலவில் பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு  பல்வேறு  தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்  தமிழ்நாடு அரசு சார்பில் நினைவு சின்னம் அமைப்பதற்கு ஒப்புதல் தரக் கோரி மத்திய சுற்றுச் சூழல் மதிப்பீட்டு குழுவிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சுற்றுசூழல் நிபுணர் குழு, 15 நிபந்தனைகளுடன் நினைவு சின்னம் அமைக்க  சுற்றுச் சூழல் மதிப்பீட்டு குழு அனுமதி வழங்கியுள்ளது. 

நிபந்தனைகளாவன:

1.எல்லா கட்டுமான பணிகளும்  கட்டாயமாக கடலோர ஒழுங்குமுறை மண்டலம் அறிவிப்பு -2011 ஐ பின்பற்றி அமைக்கப்பட வேண்டும்.

2.ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். 

3.கடல் அரிப்பும் பெருக்கமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். அவை தொடர்பான அறிக்கை மண்டல அலுவலகத்தில் அளிக்கப்பட வேண்டும்.

4.கட்டுமானத்திற்காக அமைக்கப்படும் துணைக் கட்டுமானங்களையோ அல்லது தோண்டி எடுக்கப்படுபவையோ கடலுக்கு உள்ளோ அல்லது கடற்கரையிலோ தேக்கி வைக்கப்படக்கூடாது. திட்டப் பகுதியானது  கட்டுமான வேலைகள் முடிந்த பின்னர் அதன் இயலப்பு நிலையில் மீட்டமைக்கப்பட வேண்டும்.

4.சாலை தொடர்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கமைப்பு குறித்த முழுமையான அறிக்கை  மண்டல அலுவலகத்தில் அளிக்கப்பட வேண்டும்.


6.கூட்டத்தை கட்டுப்படுத்துவது மற்றும் அவசர கால வெளியேறும் வழி ஆகியவை தொடர்பான அறிக்கைகளை 6 மாத காலத்திற்கு ஒருமுறை கட்டாயமாக மண்டல அலுவலகத்தில் அளிக்கப்பட வேண்டும்.

7. கூட்டத்தை கட்டுப்படுத்துவது  தொடர்பான அறிக்கையில் கூறப்பட்டிருப்பதற்கு ஏற்ப பார்வையாளர்கள் எண்ணிக்கை மற்றும் அனுமதித்தல் தொடர்பாக விதிமுறைகள் நேரத்திற்கு ஏற்ப சரியாக கடைபிடிக்கப் பட வேண்டும்.

8.ஆமைகள் முட்டையிடும் பகுதிகளில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளக் கூடாது. மற்றும் ஆமைகளின் இனப்பெருக்க காலமான ஜனவரி1 முதல் ஏப்ரல் மாதம் 30 வரையிலான காலத்தில்  கட்டுமான பணிகளை மேற்கொள்ளக் கூடாது.

9.கட்டுமான பணிகளுக்காக எந்த ஒரு நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்த கூடாது.

10. கடலோர ஒழுங்குமுறை மண்டல பகுதிகளில் நிரந்தர தொழிலாளர் குடியிருப்பு அமைப்பதோ இயந்திரங்கள் கட்டுமான பொருட்களை தேக்கி வைப்பதோ கூடாது.

11. திட்ட நிபுணர் குழு சட்ட ரீதியான எந்த சிக்கலும் இல்லை என சான்றளிக்க வேண்டும்.

12.  திட்ட நிபுணர் குழுவிற்கு நிதிமன்றமோ அல்லது ஆணையமோ வழங்கும் வழிகாட்டுதலை நடைமுறை படுத்தக்கோரி ஆணையிட அதிகாரம் உண்டு.

13.கடலோர ஒழுங்குமுறை மண்டல தடையில்லா சான்றானது தேசிய பசுமை தீரப்பாயத்தின் இறுதி உத்தரவிற்கு உட்பட்டதாகும்.

14.தமிழ்நாடு கடலோர மேலாண்மை ஆணையத்தின் நிபந்தணைகள் அனைத்தும் பின்பற்றப்பட வேண்டும். 
மேலும் இவை பின்பற்றப்படுவதை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும்.

15.திட்டத்தை துவங்கும் முன்னதாக திட்டம் தொடர்பான அனைத்து துறைகளிடமும் தடையில்லா சான்று பெற வேண்டும்.