ஓட்டுநர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்...அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் வலியுறுத்தல்!

ஓட்டுநர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்...அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் வலியுறுத்தல்!

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள ஊர்தி ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 


திண்டுக்கல்லில் தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர் தலைமை சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் திண்டுக்கல் மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் சுப்பிரமணி கலந்து கொண்டார்.  

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத் தலைவர் சுப்பிரமணி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் 15 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் ஊர்திகள் சுமார் 5 ஆயிரத்துக்கு மேல் உள்ளது. ஆகவே, பழைய ஊர்திகளை அகற்றிவிட்டு புதிய ஊர்திகளை வழங்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிக்க : நாளை முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை...விழிப்புணர்வு பேரணி நடத்த உத்தரவு.!

மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் ஊர்தி ஓட்டுனர் பணியிடங்கள் 3,500 க்கும் மேல் காலியாக உள்ளது. காலி பணியிடத்தை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்த கட்டமாக உண்ணாவிரதம் மற்றும் பல கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்றும், ஓட்டுநர்களின் நிலைகளை கிரேடு 8, கிரேடு 11, கிரேடு 15 என வகைப்படுத்தி,  மத்திய அரசில் பணி புரியும் ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போல் தமிழக அரசுதுறையில் பணியாற்றும் ஊர்தி ஓட்டுனர்களுக்கும் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.