44வது செஸ் ஒலிம்பியாட்: நேரில் பார்வையிட்ட பழங்குடியின மாணவர்கள்...!

44வது செஸ் ஒலிம்பியாட்: நேரில் பார்வையிட்ட பழங்குடியின மாணவர்கள்...!

தமிழகம் முழுவதும் நடைபெற்ற மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி பழங்குடியின மாணவ, மாணவிகள் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பார்வையிட சென்னை அழைத்து வரப்பட்டனர்.

மாவட்ட அளவிலான செஸ்போட்டி:

ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியின மாணவ, மாணவிகள் 8 ஆயிரம் பேருக்கும் உரிய பயிற்சிகள் அளித்து மணடல, மாவட்ட அளவிலான சதுரங்கப்போட்டிகள் நடத்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவுரை வழங்கினார்.  இதன்படி, மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் நேற்று முன்தினம் தாம்பரத்தில் உள்ள சென்னை கிருத்துவ கல்லூரியில் நடைபெற்றது. அதில்  மாணவ மாணவிகள் சிறப்பாக விளையாடி 99 பேர் வெற்றி பெற்றனர். 

செஸ் போட்டியை நேரில் சென்று பார்த்தனர்:

மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெற்ற 99 மாணவர்களும்  சென்னை மாமல்லபுரத்தில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட்டை நேரில் சென்று பார்த்தனர். அவர்களுக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ், இதுபோன்ற நிகழ்வுகளில் பங்குபெற்று மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதையடுத்து அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூர், மாணவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார். 

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் :

செஸ் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடத்தப்பட்டதாகவும், இது போன்று விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின  மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்  தெரிவித்தார்.