இன்று தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுப் பயணம்... பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்...

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

இன்று தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுப் பயணம்... பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்...

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். இதன் ஒரு பகுதியாக கருப்பூரில்  சிறு குறு தொழில்துறையினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல் நடத்தினார். அப்பொது  பேசிய முதலமைச்சர்,தொழில்துறையை மேம்படுத்த பல்வேறு  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். சென்னையில் நடத்தப்பட்ட முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் பல ஆயிரம் கோடிக்கான தொழில்கள் தொடங்கப்பட உள்ளதாக கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின, இதன் மூலம் தொழில்வளம் செழிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

சேலம் மாவட்டத்தை தொடர்ந்து இன்று தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். காலை 9.30 மணிக்கு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 12 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தாய், சேய் சிறப்பு சிகிச்சை பிரிவு கட்டிடத்தை அவர் திறந்து வைக்கிறார். பின்னர் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ள மு.க.ஸ்டாலின், இன்று மாலை 5 மணிக்கு சேலம் விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.