அதிமுக - பாஜக கூட்டணி உடைகிறதா? விளக்கம் அளித்த அண்ணாமலை!

அதிமுக - பாஜக கூட்டணி உடைகிறதா? விளக்கம் அளித்த அண்ணாமலை!

தமிழக அரசியலில் ஜாதியையும் மதத்தையும் கலந்த பெருமை திமுக தலைமையையே சாரும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.  

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற செய்தி பரவி, தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், திமுக ஆட்சியை அப்புறப்படுத்தும் நோக்கில் சிலர் மத கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி இருந்தார். இது ஒருப்புறம் இருக்க, மறுபுறம் பாஜக நிர்வாகிகள் சிலர் அடுத்தடுத்து அக்கட்சியில் இருந்து விலகி கூட்டணி கட்சியான் அதிமுகவில் இணந்து வருகின்றனர். இதனால் பாஜக - அதிமுக கூட்டணியில் முறிவு ஏற்படுமா என்ற கேள்வி அரசியல் பார்வையாளர்களிடையே நிலவி வந்தது.

இதையும் படிக்க : வலுவான கூட்டணியை பொறுத்துக்கொள்ள முடியாத பாஜக...பொய் செய்தியை பரப்பி வருகிறது - உதயநிதி!

இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக அரசியலில் ஜாதியையும் மதத்தையும் கலந்த பெருமை திமுக தலைமையையே சாரும் என்று முதலமைச்சரின் குற்றம்சாட்டுக்கு பதிலடி கொடுத்தார். 

தொடர்ந்து பேசிய அவர், திராவிட கட்சிகளில் இருந்து பிஜேபிக்கு வந்து பிஜேபியை வளர்க்க வேண்டும் என்ற நிலை மாறி, தற்போது பிஜேபியில் இருந்து சென்று திராவிட கட்சிகளை வளர்க்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளதாக சாடிய அண்ணாமலை, பாஜகவில் இருந்து பிரிந்து சிலர் அதிமுகவில் இணைந்ததனால் பாஜக - அதிமுக கூட்டணியில்  எந்த பிளவும் ஏற்படாது என்று கூறி பல்வேறு கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.