உதவியாளரிடம் ராத்திரி முழுக்க துருவி துருவி விசாரணை... பயங்கர டென்ஷனில் எடப்பாடி!!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணி இன்று  அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் எடப்பாடிக்கு அதிக பிரசறை ஏற்படித்தி இருப்பதாக அதிமுக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. 

உதவியாளரிடம் ராத்திரி முழுக்க துருவி துருவி விசாரணை... பயங்கர டென்ஷனில் எடப்பாடி!!

எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மணிக்கு உயர் நீதிமன்றத்தால் முன் ஜாமீன் நிராகரிக்கப்பட்ட நிலையில், 27 ஆம் தேதி வெள்ளி இரவே அவரை கைது செய்யும்படி மேலிடத்தில் இருந்து தகவல் வந்ததாக என கூறப்படுகிறது. 

சேலம் மாவட்டம் ஓமலூர் தின்னப்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளராக அதாவது ரைட் ஹேண்டாக கடந்த 10 ஆண்டு காலமாக இருந்து வந்தவர். 

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில்தான்... அரசு வேலைக்காக மணியிடம் பணம் கொடுத்து ஏமாந்தோர் ஒன்றன் பின் ஒன்றாக வெளியே வரத் தொடங்கினர். ஆளும் கட்சியாக இருக்கும் போது, தலைவர்களுக்கு நெருக்கமானவர்கள் இப்படி செய்வது  பழசா என்ன?  

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருக்கு அரசு போக்குவரத்து கழகத்தின் உதவி பொறியாளராக வேலை வாங்கி தருவதாக கூறி 17 லட்ச ரூபாய் தமிழ்ச்செல்வன் நண்பர் செல்வகுமார் மூலமாக பணத்தைப் பெற்று கொண்டு அவரை ஏமாற்றியுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்ச்செல்வன் கடந்த மாதம் 26-ம் தேதி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்த நிலையில், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் புகாரை பெற்று விசாரணை நடத்தியதில் வங்கி கணக்கில் 17 லட்ச ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டது என்பது அப்பட்டமாக கண்டுபிடிக்கப்பட்டது .

இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உதவியாளர் மணி மற்றும் செல்வகுமார் மீது அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெறுதல் மற்றும் பணம் வாங்கிக்கொண்டு மோசடி ஈடுபடுதல் (120/B, 420 ) ஆகிய இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மாவட்டக் குற்றப் பிரிவின் டிஎஸ்பி இளமுருகன் தலைமையில் விசாரணை செய்ய உத்தவிடப்பட்டது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மணி தலைமறைவாக இருந்து வந்த நிலையில், அவர்  முன்ஜாமீன் தாக்கல் செய்த மனுவை  நீதிமன்றங்கள் அடுத்தடுத்து தள்ளுபடி செய்தது. இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் தனி உதவியாளர் மணி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்த மணி அதிகாலை தீவட்டிப்பட்டி அருகே ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் மணியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

எடப்பாடியின் உதவியாளர் மணி கைது செய்யப்படுவதைத் தவிர்க்க சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பல்வேறு முயற்சிகளை செய்தார் எடப்பாடி பழனிசாமி. அதனால்தான் மணி இத்தனை நாட்களாக வெளியே இருக்க முடிந்தது என்றும் அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

எடப்பாடியிடம் தனி உதவியாளராக 2011 இல் சேர்ந்த மணி அப்போது 100, 200 ரூபாய்க்கே  கஷ்டப்பட்டவர். ஆனால் இப்போது அவருக்கு சில நூறு கோடிகள் சொத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. எடப்பாடியின் பல்வேறு ரகசியங்கள் மணிக்கு தெரியும் என்றும் இந்த நிலையில் மணி சிறைக்குள் சென்றிருப்பது எடப்பாடிக்கு டென்ஷனை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் பேசப்பட்டு வருகிறது.

மணிக்கு மோசடிப் புகாரில் உயர் நீதிமன்றத்தால் முன் ஜாமீன் நிராகரிக்கப்பட்ட நிலையில் சேலம் மாவட்டம் காடையம்பட்டி வட்டத்தில் இருக்கும் தீவட்டி போலீஸ் ஸ்டேஷன் போலீஸாருக்கு 27 ஆம் தேதி வெள்ளி இரவே அவரை சென்று கைது செய்யும்படி மேலிடத்தில் இருந்து தகவல் வந்திருக்கிறது என கூறப்படுகிறது. மணியை தீவட்டிபட்டி போலீஸார்தான் அன்று இரவு அவரது வீட்டுக்குச் சென்று கைது செய்துள்ளனர் என்றும் இரவு முழுதும் அவரிடம், எடப்பாடியிடம் எப்போது பணிக்கு சேர்ந்தீர்கள், என்ன பணியெல்லாம் செய்வீர்கள், உங்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தார், வங்கியில் டெபாசிட் செய்வாரா, எப்படி கொடுத்தார், பணமாகக் கொடுப்பாரா.... என்பது குறித்து தொடர்ந்து விசாரித்திருக்கிறார்கள்.மணி சில கேள்விகளுக்கு பதில் கொடுத்ததாகவும் பல கேள்விகளுக்கு பதில் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 

அதையடுத்து மணியை இரவு ஆத்தூர் கிளைச் சிறையில் அடைப்பதற்காக போலீஸார் அழைத்துச் சென்றனர் என்றும் திடீரென்று ஆத்தூர் சிறையில் அடைப்பதற்கு பதிலாக, திருச்சி மத்திய சிறைக்கு மணியை அழைத்துச் சென்று நள்ளிரவு அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.