நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்...முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த உப்பளத் தொழிலாளர்கள்!

நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்...முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த உப்பளத் தொழிலாளர்கள்!

உப்பளத் தொழிலாளர்களுக்கான நலவாரியம் அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டதை தொடர்ந்து, தூத்துக்குடியில் உப்பள தொழிலாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.

உப்பளத் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு அவர்களுக்கான நல வாரியம் அமைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த நல வாரியத்தில் உப்பளத் தொழிலாளர்கள் இலவசமாக உறுப்பினராக பதிவு செய்யலாம் என்றும், பிற நல வாரியங்களைப் போன்றே உப்பளத் தொழில் நலவாரிய உறுப்பினர்களும் அனைத்து உதவித் தொகைகளையும் பெற முடியும் என்றும் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க : ஒருநாள் கால தாமதமா...! இந்திய வானிலை மையம் திடீர் அறிவிப்பு!!

இந்த அறிவிப்பை தொடர்ந்து தூத்துக்குடியில் உப்பளத் தொழிலாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தேர்தல் வாக்குறுதியான மழைக்கால நிவாரணம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தனி நலவாரியம் அமைக்கப்பட்டதற்கு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக உப்பள தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.