"நீதித்துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் மாநிலம் தமிழ்நாடு" - அமைச்சர் ரகுபதி

"நீதித்துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் மாநிலம் தமிழ்நாடு" - அமைச்சர் ரகுபதி

நாகப்பட்டினம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட திருக்குவளை உரிமையியல் நீதிமன்ற திறப்பு விழா இன்று நடைபெற்றது. நீதிமன்ற கட்டிடத்தை சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆதிகேசவன், தாரணி,  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர். மேலும் தனியார் வாடகை கட்டிடங்களில் இயங்கி வந்த  கூடுதல் மகளிர் நீதிமன்றம், மகளிர் விரைவு நீதிமன்றங்களையும் நீதிபதி திறந்து வைத்து பார்வையிட்டார். 

அதனைத் தொடர்ந்து  சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பேசுகையில் இளம் வழக்கறிஞர்கள் மூத்த வழக்கறிஞர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும், கடின உழைப்போடு அனைத்து புத்தகங்களையும் படிக்க வேண்டும் அப்போதுதான் சிறந்த வழக்கறிஞராக உயரமுடியும் என தெரிவித்தார்.

 அதனைத் தொடர்ந்நு பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழகத்தில் குறைந்த பொருளாதாரத்தில் அதிக நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது என்றும் நீதிமன்றங்களுக்கு மத்திய அரசு வழங்கும் 60 சதவீத பங்கு தொகையை கடந்த ஆண்டு வழங்கவில்லை அதை இந்த ஆண்டு வழங்கும் என்று எதிர் பார்க்கிறோம் என்று தெரிவித்த அவர் இந்தியாவிலயே நீதிதுறை வளர்ச்சிக்கு அதிகம் முக்கியத்துவம் தரும் மாநிலம் தமிழ்நாடு என்றும் மத்திய அரசின் பங்கு தொகை கிடைத்ததும் நீதித்துறையின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.  

இந்த நிகழ்ச்சியில், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், மாவட்ட தலைமை நீதிபதி கந்தகுமார், மாவட்ட எஸ்பி ஜவஹர் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்துக்கொண்டனர்.

இதையும்  படிக்க     } திமுகவின் தேர்தல் அறிக்கைகளை பின்பற்றும் அண்டை மாநிலங்கள்..!!