ஸ்குவாஷ் உலகக் கோப்பை நிறைவு விழா...அமைச்சர் உதயநிதியை பாராட்டிய முதலமைச்சர்!

ஸ்குவாஷ் உலகக் கோப்பை நிறைவு விழா...அமைச்சர் உதயநிதியை பாராட்டிய முதலமைச்சர்!

பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளுக்கு விருப்பமான இடமாக தமிழ்நாடு மாறியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற எகிப்து அணிக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின், எகிப்து அணிக்கு கோப்பையை வழங்கி 82 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

இதையும் படிக்க : எஸ்.ஜி.சூர்யா கைது...அண்ணாமலை கண்டனம்!

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், நான்கு மாதங்களில் பன்னாட்டு போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்ததாகவும், விளையாட்டு வீரர்களின் கவனத்தை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதற்கு இது காரணமாக அமையும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், விளையாட்டுத் துறையின் கேப்டனாக உதயநிதி இருந்துகொண்டு அனைத்து வீரர்களையும் சாம்பியன்களாக உருவாக்கி வருவதாக பாராட்டு தெரிவித்தார். மேலும் வெற்றியை மட்டுமே இலக்காக கொண்டு விளையாடுங்கள் என வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.