தமிழ்நாடு பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரை மக்களவை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசனை அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரில் தமிழ்நாடு பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நேற்று கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக அண்ணாமலை அவரது ட்விட்டர் பக்கத்தில், சமூகப் பிரச்னைகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் இரட்டை வேட நிலைப்பாட்டினை விமர்சித்ததற்காக சூர்யா கைது செய்யப்பட்டதாகவும், விமர்சனங்களை கருத்தால் எதிர்கொள்ளத் திறனற்ற திமுக, எதிர்க்கருத்துக்கள் கூறுபவர்களைக் கைது செய்து, அவர்கள் குரலை முடக்கப் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : அரசு விழாவில் நடந்தது என்ன? நவாஸ் கனி விளக்கம்!
மேலும் அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களை எல்லாம் கைது செய்யும் ஜனநாயக விரோதப் போக்கு தமிழ்நாட்டில் நிலவுவதாகவும், எதிர்க் குரல்களை எல்லாம் நசுக்க நினைக்கும் திமுகவின் முயற்சி நீண்ட நாளைக்குச் செல்லாது எனவும் கூறியுள்ளார்.