அப்படி யாரும் கை விட மாட்டோம்... - மருத்துவர் உறுதி!!!

அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற  விவகாரத்தில் தவறுகள் தெரிய வந்தால் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பொன் இசக்கி உறுதிப்படுத்தியுள்ளார்.

அப்படி யாரும் கை விட மாட்டோம்... - மருத்துவர் உறுதி!!!

தூத்துக்குடி: குமரி கார்டு பகுதியைச் சேர்ந்த துர்கா என்ற நிறைமாத கர்ப்பிணி  பெண், கடந்த மூன்று நாட்களாக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாலை உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறி மருத்துவமனையில் இருந்து வெளியேறி தனியார் மருத்துவமனைக்கு பிரசவ வலியுடன் நடந்து சென்றார்.

மேலும் படிக்க | போகும் வழியிலேயே கம்பளத்தில் குழந்தை பெற்ற தாய்!!! குழந்தை இறந்த அவலம்!!!

செய்தி வெளியான நிலையில் தூத்துக்குடி மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பொன் இசக்கி திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணிப் பெண் துர்காவிடம் நேரில் விசாரணை நடத்தினார். மேலும் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவது குறித்து மருத்துவர்களிடம் கேட்டு அறிந்தார்.

தொடர்ந்து அவர் கர்ப்பிணி பெண் துர்கா மற்றும் அவரது தாயாரிடம்  மீண்டும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு  வருமாறு அழைப்பு விடுத்தார் அதற்கு கர்ப்பிணிப் பெண்ணின் தாயார் அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறி அரசு மருத்துவமனைக்கு வர மறுத்துவிட்டார்.

மேலும் படிக்க | முறையான சிகிச்சையின்மையால் கர்ப்பிணி பெண் மரணம் : நஷ்டஈடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு !!

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என எழுந்த புகார் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி இருக்கிறேன்.

மேலும் படிக்க | தவறி விழுந்த இருவர் பலி!!! எதிரபாரா விபத்தால் பரபரப்பு!!!

மீண்டும் நாளை அரசு மருத்துவமனை சென்று மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்த அவர் இந்த விவாகரத்தில் தவறு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிப்படுத்த தெரிவித்தார்.