போகும் வழியிலேயே கம்பளத்தில் குழந்தை பெற்ற தாய்!!! குழந்தை இறந்த அவலம்!!!

மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே கம்பளத்தில் குழந்தையை பெற்ற பழங்குடியின் பெண், குழந்தையை இழந்துவிட்டார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போகும் வழியிலேயே கம்பளத்தில் குழந்தை பெற்ற தாய்!!! குழந்தை இறந்த அவலம்!!!

மருத்துவ வசதி என்பது மிகவும் அதிகமாக இல்லாத இடங்களில் பல வகையான இறப்புகள் இருக்கின்றன. அதிலும் குழந்தைகளுக்கு மருத்துவ வசதிகள் இல்லாததால் பல இழப்புகள் ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் தற்போது, ஒரு தாய், தனது குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே இழக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மகாராஷ்டிராவின் பிவாண்டியில் உள்ள திகாஷி கிராமம், தார்மிபாதா பகுதியைச் சேர்ந்தவர், 32 வயதான தஷனா ஃபராலே. கடந்த செப்டம்பர் 1ம் தேதி, காலை 9 மணியளவில், பிரசவ வலி இருப்பதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த 8-10 கிராம வாசிகள் இணைந்து, போர்வை கம்பளத்தில் தஷனாவை வைத்துக் கொண்டு, 1.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பிரசவத்திற்காக அழைத்துச் செல்ல முயற்சி செய்துள்ளனர்.

மேலும் படிக்க | சிறுநீரைக் குடிக்க வைத்த பாஜக தலைவர் செய்த அசிங்கம் அம்பலமானது!!!

பல பெரும் மேடுகள் நிரைந்த மலை பகுதிகளில் வாழும் இந்த குறிப்பிட்ட பழங்குடியினர்களின் இடத்தில் இருந்து மருத்துவமனை வரை செல்ல சுமார் 30-45 நிமிடங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி, கர்ப்பிணி பெண்ணையும் கம்பளத்தில் தூக்கி செல்லும் நேரம் இன்னும் நேரம் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனைக்கு செல்லும் போது பாதி வழியிலேயே தஷானா குழந்தை பெற்றுள்ளார். ஆனால், பல போராட்டங்கள் தாண்டி சரியான மருத்துவ வசதி இல்லாததால் குழந்தை இறந்தே பிறந்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து, குழந்தையையும், தாயையும் காப்பாற்ற மேலும் வேகமாக மருத்துவமனைக்கு விரைந்திருக்கின்றனர். ஆனாலும், எந்த பயனும் இல்லை. ஏனென்றால், அந்த குழந்தை ஏற்கனவே இறந்திருக்கிறது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது முதன் முறை அல்ல. ஏற்கனவே பல முறை இது போன்ற சிகிச்சை இல்லத காரணத்தால், பல உயிர்கள் இழந்துள்ளது அக்கிராமம்.

மேலும் படிக்க | கைது செய்யப்பட்டார் கொடூரக்காரி!!! வைரலான வீடியோவால் வந்த விடியல்!!!

சுமார் 100 குடும்பங்கள் வாழும் இந்த கிராமத்திற்கு தனி மருத்துவமனை தேவை என்றும், மருத்துவ வசதி கேட்டும் பல முறை மனு கொடுத்த பிறகும் எந்த உதவிகளும் கிடைக்காததை அடுத்து தற்போது நடந்துள்ள இச்சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பிவாண்டியின் தாசில்தார் ஆதிக் பாடில், தனது அதிகாரிகளை அனுப்பி இது குறித்த விசாரணையில் ஈடுபடுவதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மருத்துவமனை விட்டு வெளியேற முதலில் நடனமாடு!!!- கமலா புஜாரியை வற்புறுத்திய சமூக ஆர்வலர்!!!