மக்கள் நல பணியாளர்கள் பணி நியமன விவகாரம்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

மக்கள் நலப்பணியாளர்களுக்கு பணி வழங்கும் தமிழக அரசின் முடிவுக்கு  தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

மக்கள் நல பணியாளர்கள் பணி நியமன விவகாரம்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

ஜெயலலிதா ஆட்சி காலத்திவ் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து, மீண்டும் பணி வாய்ப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியிருந்தார்.

இதன்படி இவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு மதிப்பூதியமாக 7 ஆயிரத்து 500- வழங்கவும் தமிழக அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் 7 ஆயிரத்து 500 மதிப்பூதியம் போதாது என கூறி தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிராக மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தினர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மக்கள் நல பணியாளர்கள் பணி நியமன விவகாரத்தில் அரசின் புதிய கொள்கையை ஏற்றுக்கொள்பவர்கள் தாராளமாக ஏற்றுக்கொள்ளலாம் என்றும் அரசின் புதிய கொள்கைகளில் விருப்பமில்லாதவர்கள் தங்களது கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைக்க அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

 மேலும் அரசின் புதிய முடிவிற்கு உடன் படும்படி யாரையும் கட்டாயப்படுத்த கூடாது என உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.