"பவளவிழா கொண்டாடும் கல்லூரியில் நூற்றாண்டு விழா” - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

"பவளவிழா கொண்டாடும் கல்லூரியில் நூற்றாண்டு விழா” - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழா இசை பாடல் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்த பாடல் வெளியிடுவதற்கு முன்னதாக மேடையில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், பொதுசுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவினை கண்டுகொண்டுள்ளது. பவளவிழா கொண்டாடும் எத்திராஜ் கல்லூரியில் நூற்றாண்டு விழா கொண்டப்படுகிறது. இக்கல்லூரி சென்னையின் பெருமைமிக்க அடையாளங்களுள் ஒன்று என்று கூறிய அவர்,  சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும்; நல்ல விஷயங்களுக்கு கைக்கொடுக்கும் நிகழ்வினை இக்கல்லூரி செய்கிறது என்றார். 


 
தொடர்ந்து பேசிய அவர், நூறாண்டு விழா கொண்டாடும் வேளையில் நூற்றுக்கும் மேற்பட்ட நோய்களும் இருந்து வருகிறது, கொரோனா பல உருமாற்றம் கண்டுள்ளது. இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தும் பணியை பொதுசுகாதாரத்துறை செய்கிறது. டிசம்பர் 6,7,8 ஆகிய தேதிகளில் சென்னை மகாபலிபுரத்தில் பொது சுகாதாரத்துறை சர்வதேச மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவில் பங்கேற்க 2000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பதிவு செய்துள்ளார்கள். அதேபோல, 250க்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வறிக்கை வரப்பட்டுள்ளது என தெரிவித்தார். 
 
அதனைத் தொடர்ந்து இசையமைப்பாளரும், எழுத்தாளருமான அறிவு எழுதி பாடிய பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழாவிற்கான ’ஹேப்பியா இரு’ என்ற பாடல் வெளியிடப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் செந்தில்குமார், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குனர் செல்வ விநாயகம், சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க : தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் தலம் எது தெரியுமா? அதன் காரணம் என்ன?