கோவை - ஷீரடி தனியார் இரயில் சேவை.. ஸ்லீப்பர் கோச் கட்டணம் எவ்வளவு தெரியுமா!!

பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் முதல் முறையாக கோவையில் இருந்து சீரடிக்கு தனியார் இரயில் சேவை துவங்கியுள்ளது.

கோவை - ஷீரடி தனியார் இரயில் சேவை.. ஸ்லீப்பர் கோச் கட்டணம் எவ்வளவு தெரியுமா!!

கோவை மாவட்டம், வடகோவை இரயில் நிலையத்தில் இருந்து சீரடிக்கு ஆன்மிக சுற்றுலா ரயிலாக இயக்கப்படும் சிறப்பு ரயில் இன்று தனது முதல் பயணத்தை துவங்கியது.

மாலை அணிவித்து, மங்கள வாத்தியங்கள் முழங்க ரயில் சேவை துவங்கப்பட்டது. இதில் நடிகர் சேரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மலர்களைத் தூவி இரயில் சேவையை துவக்கி வைத்தனர்.

இந்த சிறப்பு ரயிலில், ஹவுஸ் கீப்பிங், செக்யூரிட்டி, மருத்துவர்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனாளிகளுக்கு விபத்து காப்பீடு பிரிமியம் உள்ளிட்டவை தனியார் நிறுவனத்தால் ஏற்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இரயில் பயணிகளுக்கு சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு விஐபி தரிசனம் வழங்கப்படும். கோவிலுக்கு செல்ல பேருந்து வசதி, ஷீரடியில் பக்தர்கள் தங்க ஏசி வசதியுடன் கூடிய அறைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என என ரயில்வே மக்கள் தொட்பாளர் புவனேசன் தெரிவித்தார்.

வாரம் ஒரு முறை செல்லும் இந்த ரயில் கோவையில் தொடங்கி திருப்பூர், ஈரோடு, பெங்களூரு வழியாக ஷீரடி சென்றடையும். இதற்கான டிக்கெட்டுகள் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலத்தில் உள்ள சாய்பாபா கோயில்களில் கிடைக்கும் என தனியார் ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, கோவையில் இருந்து சீரடிக்கு செல்ல ஸ்லீப்பர் கட்டணம் 2 ஆயிரத்து 500 ரூபாயாகவும்,  மூன்றடுக்கு குளிர்சாதன படுக்கைக்கு 5 ஆயிரம் ரூபாய் கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. இதையடுத்து இந்த ரயில் சேவைக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.