காணாமல் முருகன் வள்ளி தேவானை சிலை மீட்பு!

பெரம்பூர் அர்ருகே, சாமி சிலை திருடப்பட்டதாகப் புகார் எழுந்த நிலையில், காணாமல் போன சிலைகளை போலீசார் மீட்டுள்ளனர்.

காணாமல் முருகன் வள்ளி தேவானை சிலை மீட்பு!

சென்னை அயனாவரம் பணந்தோப்பு ரயில்வே காலனி பகுதியில் சுப செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலை கனக சபாபதி என்பவர் நிர்வாகித்து வருகிறார். இந்த கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி கோவிலில் இருந்த முருகன் உற்சவர் சிலை வள்ளி தெய்வானை உள்ளிட்ட சிலைகள் மற்றும் சிறிய உண்டியல் திருடு போனது.

இது குறித்து ஓட்டேரி குற்ற பிரிவு போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில், சிசிடிவி காட்சிகளை மையமாக வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் ஓட்டேரி குக்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் 21 என்ற நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் அவர் கோவிலில் திருடியதை ஒப்புக்கொண்டார். திருடிய சுவாமி சிலைகளை அயனாவரம் திக்கா குளம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் 21 என்ற நபரிடம் கொடுத்து இருந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து சந்தோஷை நேற்று கைது செய்த போலீசார் காணாமல் போன வள்ளி தெய்வானை முருகர் சிலைகளை மீட்டனர்.

கைது செய்யப்பட்ட விக்னேஷ் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த ஓட்டேரி போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆதர படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.