மக்கள் சிந்திப்பதற்கு முன்னால் அடுத்த பொய் சொல்லப் போயிடணும் - அண்ணாமலையை வருத்தெடுத்த முரசொலி

மக்கள் சிந்திப்பதற்கு முன்னால் அடுத்த பொய் சொல்லப் போயிடணும் - அண்ணாமலையை  வருத்தெடுத்த முரசொலி

'என் கையில் அழுக்கு'

அரண்மனையையே நாசம் செய்து கொண்டிருந்த ஒருவனைக் கூப்பிட்டு கடற்கரையில் உட்கார வைத்தார் இராஜா. காலையில் இருந்து எத்தனை அலைகள் கரைக்கு வருகின்றன. எத்தனை கடலுக்குள் போகின்றன என்று கணக்குப் பார்த்து தினமும் எழுதித் தரவேண்டும் என்ற வேலையைக் கொடுத்தார்கள். அப்போதாவது சும்மா இருப்பான் என்று நினைத்தார்கள்.

இந்த அதிபுத்திசாலி, கரையில் உட்கார்ந்து கொண்டு கரைக்கு வரும் கப்பல்களை நிறுத்தினான். கடலை நோக்கிப் போகும் கப்பல்களையும் நிறுத்தினான். 'கப்பல்கள் வந்தாலும் போனாலும் அலைகள் கலைந்து போகும். இது ராஜாவின் உத்தரவினை மீறும் தண்டனை. கப்பல்கள் உள்ளே வந்தாலும் வெளியே போனாலும் எனக்குக் கொஞ்சம் கொடுத்துவிட்டுப் போகவேண்டும்' என்றான்.

எனவே 'கலைந்து போகும் அலைகளை மீண்டும் எண்ணி ராஜாவிடம் கணக்கு ஒப்படைக்க கொஞ்சம் செலவாகும்' என்றானாம் அவன். அப்படி அலைகளை எண்ணியவன் கதை இது!

நோட்டாவுக்குக் கீழே கிடக்கும் கட்சியை நோட்டாவுக்கு மேலே கொண்டு வரத் தகுதி வாய்ந்தவர் யாராவது கிடைக்க மாட்டார்களா? என்று தேடியது அந்தக் கட்சி. அப்போதுதான் நான்கு ஆடுகளை வைத்து நான்கு லட்சத்துக்கு வாட்ச் வாங்கிய ஒருவர் கிடைத்தார். உனது திறமையைச் சொல் என்றது அந்தக் கட்சி! செய்தே காட்டுவேன் என்றது ஆடு!

"டேய்! உன்கிட்ட என்ன கேட்டோம்?”

*ரஃபேல் வாட்ச் பில் கேட்டீங்க”

"யார் கையில இருக்கிற வாட்ச் பில்?"

“என் கையில கட்டியிருக்கிற வாட்ச் பில்"

"உன் கையில உள்ள வாட்ச்சோட வரிசை எண் என்னனு நீ சொன்ன?”

"149னு சொன்னேன்"

"இப்ப எந்த வரிசை எண் கொண்ட வாட்ச்சோட பில்லை காட்டியிருக்க?”

*147ஆவது வரிசை எண் கொண்ட வாட்ச்சோட பில்லை காட்டியிருக்கேன்

"அது யாருடைய வாட்ச்?"

"என் நண்பன் சேரலாதன் ராமகிருஷ்ணனோடது"

*சரி, உன் நண்பன் சேரலாதன் ராமகிருஷ்ணனோட 147ஆவது ரஃபேல் வாட்ச் பில் இங்க இருக்கு. உன் கையில கட்டியிருக்க 149ஆவது வாட்ச்சோட பில் எங்க?”

“அதாங்ணா இது” – இப்போது நடந்து கொண்டிருப்பது இதுதான். ஆனால் அவரை 'செந்தில்' என்று நினைத்து விடாதீர்கள்!

இணைய தளங்களில் எழுப்பப்படும் கேள்விகளை வரிசைப்படுத்திப் பாருங்கள்...

1.சேரலாதன் வாங்கிய வாட்ச் மாடலும், சேரலாதனிடமிருந்து அண்ணாமலை வாங்கிய வாட்ச் மாடலும் வெவ்வேறானவை.

2. நாலரை லட்ச ரூபாய்க்கு watch வாங்கும் இடத்தில் கையில் எழுதி Bill தரமாட்டார்கள். கண்டிப்பாக Computerized Bill தான் இருக்கும்.

3. நாலரை லட்ச ரூபாய்க்கு வாங்கிய வாட்ச்சை யாராவது இரண்டே மாதத்தில் அதை ஒன்றரை லட்ச ரூபாய் குறைத்து 3 லட்ச ரூபாய்க்கு விற்பாரா? (அது ஒரு அரிதான கலெக்ஷன் சீரிஸ். அப்படி பார்த்தால் விலை ஏறிக்கொண்டுதான் செல்ல வேண்டும்)

4. அப்படி விற்பவரோ, அல்லது வாங்குபவரோ, அதாவது நெருங்கிய நண்பராக இருக்கும் போது யாராவது A4 sheet எழுதி கையெழுத்திட்டு தருவார்களா?

எனக்கு வேறு வழி தெரியவில்லை; நண்பர்களிடம் மன்னிப்பு கோரியிருக்கிறேன்” -  அண்ணாமலை | I personally apologised to friends and explained the reason  behind my actions - hindutamil.in

5. Model release 147 or 149 என்பதில் குழப்பம்

6. As per Section 269ST, இரண்டு லட்சத்துக்கு மேலே ரொக்கமாக கொடுத்து வாங்கினால் அதற்கு வருமானவரி விதிப்படி அபராதம் மற்றும் தண்டனை உண்டு..

7. ஜீ கஷ்டப்பட்டு digital transaction ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் போது அண்ணாமலை அதை மீறி இருக்கிறார்.

8. அந்த பில்லில் ஜி.எஸ்.டி. என்று வரி பிடித்தம் செய்திருக்கிறார்கள். ஆனால் பில்லில் HSN நம்பர் இல்லை.. ஜி.எஸ்.டி. சட்டத்தின் படி HSN நம்பர் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

இவ்வளவு கேள்விக்கும் பதில் சொல்லி விட்டார் அண்ணாமலை, 'அதுதாங்க இது... கையில் அழுக்கு இருந்ததால் நம்பரைத் தப்பா சொல்லிட்டேன் ! கையில் அழுக்கு இருப்பதுதான் ஆரம்பத்திலேயே தெரியுமே! ஆருத்ரா நிதிநிறுவனம், ஊர் மக்களை ஏமாற்றி மோசடி செய்ததாக காவல் துறையில் மாட்டி இருக்கிறது. பலரும் கைதாகி இருக்கிறார்கள். சிலர் தலைமறைவு ஆகி விட்டார்கள்.

அவர்களையும் போலீஸ் தேடிக் கொண்டு இருக்கிறது. இந்த மோசடி நிறுவனத்தில் பணத்தை இழந்தவர்கள், பா.ஜ.க. அலுவலகத்தின் வாசலுக்குப் போய் நிற்கிறார்கள். ஏனென்றால் அங்கு தான் 'கடலலையை' நிறுத்தி எண்ணிய ஆள் இருக்கிறார். பா.ஜ.க. நிர்வாகி ஹரீஷ் கைதாகி இருக்கிறார். இன்னொரு பா.ஜ.க. நிர்வாகி சுரேஷ் என்பவர் தலைமறைவாகி இருக்கிறார். இதை மறைக்கத்தான் இத்தனை நாடகங்கள்.

பாதம் மட்டுமே மூழ்கும் இடத்தில் படகு விட்டு படம் எடுத்ததில் ஆரம்பித்தது அண்ணாமலையின் அரசியல். வாயைத் திறந்தால் பொய்.

20 ஆயிரம் புத்தகம் படிச்சிட்டேன்.

சட்ட நடவடிக்கையை சந்திக்க தயார்- அண்ணாமலை பேட்டி | Annamalai says ready to  face legal action

2 லட்சம் கேஸ் போட்டுட்டேன்.

1967 இல் சத்ரபதி சிவாஜி, சென்னைக்கு வந்தார்.

இராசராச சோழன், ஆமை கழுத்துல கயிறு கட்டிட்டு கடலில் பயணம் செய்தார்.

வல்வில் ஓரி, ஒரு சுதந்திரப் போராட்ட வீரர்.

காது கேளாதவர்க்கு வாங்கப்பட்ட 345 ரூபாய் மதிப்பிலான மிஷினை 10 ஆயிரம் என்றார்.

நீட் தேர்வில் அல்ஜீப்ரா கேட்பார்கள் என்றார்.

360 டிகிரி மாறுபட்டவர்கள் என்றார். 360 டிகிரி என்றாலே ஒரே கோணம் என்றே தெரியவில்லை.

பொய் சொல்லும் போது பெரிய விஷயமா சொல்லணும். மக்கள் சிந்திப்பதற்கு முன்னால் அடுத்த பொய் சொல்லப் போயிடணும். இதுதான் அண்ணாமலையின் அரசியல்.

மேலும் படிக்க | லஞ்சம் வாங்கியதாக மேயரின் உதவியாளர் கைது