5 பேர் உயிரிழப்பு...சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்...அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!

5 பேர் உயிரிழப்பு...சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்...அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!

சென்னை நங்கநல்லூர் கோயிலில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில், ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


சென்னை நங்கநல்லூர் கோயிலில் பங்குனி உத்திரத்தை ஒட்டி நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது, கோவில் குளத்தில் மூழ்கிய 20க்கும் மேற்பட்டோரில் 5 பேர் மட்டும் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சட்டப்பேரவையிலும் இந்த சம்பவம் எதிரொலித்தது. உயிரிழந்தவர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமி, செல்வப் பெருந்தகை, ஜி.கே. மணி, நாகை மாலி, ராமச்சந்திரன், வேல்முருகன் உள்ளிட்ட எதிர் கட்சிகள், தீர்த்தவாரி சம்பவம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.  

இதையும் படிக்க : ட்வீட் செய்த பிரகாஷ் ராஜ் ...ட்விஸ்ட் வைத்த கிச்சா சுதீப்...!

இதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, முதலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தவர், நிகழ்ச்சி குறித்து அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று தெரிவித்தார். இனி துறைக்கு  முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர், உயிழந்தவர்கள் குடும்பத்திற்கு என்னவெல்லாம் உதவி செய்ய முடியுமோ அனைத்தும் செய்து தரப்படும் என்றும் உருக்கத்துடன் கூறினார்.