ட்வீட் செய்த பிரகாஷ் ராஜ் ...ட்விஸ்ட் வைத்த கிச்சா சுதீப்...!

ட்வீட் செய்த பிரகாஷ் ராஜ் ...ட்விஸ்ட் வைத்த கிச்சா சுதீப்...!

பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப், பாஜகவில் இணைகிறார் என்ற செய்தி பொய்யானது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் ட்வீட்  செய்திருந்த நிலையில், பாஜகவுக்காக பிரச்சாரம் செய்வதாக கிச்சா கூறியிருக்கிறார்.

பொதுவாகவே, நடிகர்கள் நடிகைகள் தங்களை அரசியலில் இணைத்துக்கொள்வது என்பது வழக்கமான ஒன்று தான். அதிலும் குறிப்பாக, அவர்கள் அதிகம் இணையும் கட்சி என்றால் அது பிஜேபி தான் என்றும் சொல்லும் அளவுக்கு அடுத்தடுத்து திரைபிரபலங்கள் இணைந்து வந்தனர். குஷ்பு, நமீதா, கெளதமி, காயத்ரி ரகுராம், இளையராஜா என இப்படி ஒரு திரைப்பிரபல பட்டாளத்தையே தங்கள் பக்கம் வைத்திருக்கும் பாஜகவுக்கு இது மிகப்பெரிய பிளஸ் என்றே பாஜக வட்டாரங்களில் பேசப்படுகிறது. 

இதற்கு காரணம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஒரு நபர் கட்சியில் இருந்தால் அது கட்சிக்கு மிகப்பெரிய பலம் என்று பாஜக கருதுவதால் தான் தேர்தல் நேரத்தில் பிரபலங்களை தங்கள் பக்கம்  ஈர்த்து அழகாய் காய் நகர்த்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இது போன்ற ஒரு யுக்தியை தான் கர்நாடக சட்டசபை தேர்தலிலும் பாஜக அப்ளை பண்ணப்போகிறது என்பதற்கான சில யூகங்கள் தான் தற்போது வெளியாகி உள்ளது. 

இதையும் படிக்க : புதிய மாவட்டம் ஆகிறதா பழனி? பதிலளித்த அமைச்சர்...!

வருகின்ற மே மாதம் 10 ஆம் தேதி கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதால், அதற்கு முன்னதாக 
பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் பிஜேபியில் தன்னை   இணைத்து கொள்கிறார் என்று செய்தி வெளியானது. ஆனால், சுதீப் தரப்பில் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வமான தகவலும்  வெளியாகாததால், இந்த செய்தி முழுக்க முழுக்க பிஜேபியின் தேர்தல் வியூகம் தான் என்று கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், நடிகர் கிச்சா சுதீப் பிஜேபியில் இணைந்ததாக வெளியான செய்திக்கு நடிகரும், அவரின் நண்பருமான பிரகாஷ் ராஜ், கருத்து தெரிவித்துள்ளது தற்போது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ’கர்நாடகாவில் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் பிஜேபியால் பரப்பப்படும் பொய்யான செய்தி’ என்று பிரகாஷ் ராஜ் கூறியிருப்பது, பாஜக தான் தேர்தலுக்காக பொய்யான செய்தியை பரப்பி வருகிறதா என்ற சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடிகர் கிச்சா சுதீப், பிஜேபிக்காக பிரச்சாரம் செய்வேன், ஆனால் சட்டசபை தேர்தல் போட்டியிட மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் எனக்கு மிரட்டல் கடிதம் வந்ததாகவும் கூறியுள்ளார். நண்பருக்காக நடிகர் பிரகாஷ் ராஜ் ட்வீட் செய்திருந்த நிலையில், நடிகர் கிச்சா சுதீப் பிஜேபிக்காக பிரச்சாரம் செய்வதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.