பழனி தனி மாவட்டமாக அறிவிக்கப்படவுள்ளதா என்ற கேள்விக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதிலளித்துள்ளார்.
திமுக ஆட்சி தொடங்கியது முதலே திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி புதிய மாவட்டமாக உருவாக்கப்படவுள்ளதாக செய்தி வெளியாகி பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் வினாக்கள் - விடைகள் நேரம் நடைபெற்று வரும் நிலையில், பழனி தனி மாவட்டமாக பிரிக்கப்படுவதாக வெளியான செய்தி தொடர்பாக கேள்வி எழுப்பிய அதிமுக சமஉ மகேந்திரனுக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், மாவட்டங்களை பிரிக்கும் போது சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்தை கேட்காமல் முதலமைச்சர் பிரிக்கமாட்டார் என்று பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், மாவட்டங்களை பிரிப்பதாக எங்கே சொன்னோம், அரசின் கவனத்தில் இருப்பதாகவே கூறினோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.