ரூ. 54 கோடி மதிப்பிலான 12 புதிய வட்ட செயல்முறை கிடங்குகளை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்!

ரூ. 54 கோடி மதிப்பிலான 12 புதிய வட்ட செயல்முறை கிடங்குகளை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்!

8 மாவட்டங்களில் 106 நவீன நெல் சேமிப்பு தளங்களை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 54 கோடி ரூபாய் மதிப்பிலான 12 புதிய வட்ட செயல்முறைக் கிடங்குகளையும் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காணொலி மூலம் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் ரூ. 105.08 கோடி மதிப்பீட்டில் 1,42,450 மெட்ரிக் டன் கொள்ளளவில் மேற்கூரையுடன் அமைக்கப்பட்டுள்ள 106 நவீன நெல் சேமிப்புத் தளங்களைத் திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், 54 கோடி ரூபாய் மதிப்பிலான 12 புதிய வட்ட செயல்முறைக் கிடங்குகள் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.  

இதையும் படிக்க : கழுதையா? ஆடா? மாநிலங்களவையில் நிகழ்ந்த கலகலப்பான விவாதம்...இறுதியில் ஜெயிச்சது யார்?

இதைத் தொடர்ந்து பொதுத் துறை சார்பில் குடியரசு தின விழா 2023 அணிவகுப்பில் கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்ட படைப்பிரிவிற்கு பரிசுகளையும், சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்தவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.