இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் விரைவில் விடுதலை...எல்.முருகன் உறுதி...!!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் விரைவில் விடுதலை...எல்.முருகன் உறுதி...!!

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறுகையில், 

பாஜக ஆட்சியில் ஒரு மீனவர்கள் கூட சுட்டுக் கொல்லப்படவில்லை என்றும் இலங்கை கடற்படை இந்திய மீனவர்களை கைது செய்வது தொடர்ந்து கொண்டுள்ளது என்றார்.

மேலும் கைது செய்யப்பட்டுள்ள 55 மீனவர்களின் மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது கூடிய விரைவில் அவர்கள் விடுதலை செய்வதற்கான உறுதியை அளிக்கிறேன் என்றும் மீனவர்கள் சர்வதேச எல்லையில் கைது செய்யப் படாமல் இருப்பதற்காக கூடுதல் கமிட்டி மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறினார்.

மேலும், தமிழகத்திற்கு தடுப்பூசி பகிர்ந்து அளிப்பதில் எந்த பாரபட்சமும் பார்ப்பது கிடையாது. அனைவரையும் கூப்பிட்டு தடுப்பூசி செலுத்தும் நிலைதான் தமிழகத்தில் உள்ளது என குறிப்பிட்டார்.

தர்மபுரி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திமுகவினரால் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து பதில் அளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் :-

திமுகவினரின் ரத்தத்தில் ஊறிப்போனதுதான் கருத்து சுதந்திரத்தை அவமதிப்பதும் பலி கொடுப்பதும் என்றார். கருத்து சுதந்திரம் பேசும் மாற்று கட்சியினர் தாக்கப்படுவது கைது செய்யப்படுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாக பார்க்கிறேன் என கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், முரசொலி மூலப்பத்திரம் சம்பந்தமாக என்மேல் எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் என்னுடைய சொந்தங்களுக்கு உரிமை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக  அதை சந்திப்பதற்கு தயாராக இருக்கிறேன் என்றார்.