கொடைக்கானலில் வறண்ட வானிலைக்கு இடையே மிதமான மழை..! மக்கள் மகிழ்ச்சி.

கொடைக்கானலில் வறண்ட வானிலைக்கு இடையே மிதமான மழை..!  மக்கள் மகிழ்ச்சி.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பரவலாக பெய்து வரும் மழையால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக வறண்ட சூழல் நிலவி வந்த நிலையில், கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்தது. 


திண்டுக்கல்மாவட்டம்கொடைக்கானலில் கடந்த இரண்டு தினங்களாக தொடர்ந்து சாரல் மழை மற்றும் மழை பெய்து வருகிறது . நேற்று கொடைக்கானலில் 35 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. இதனால் கொடைக்கானலில் நிலவிய வறண்ட சூழ்நிலை மாறி குளிர் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. 

தொடர்ந்து பெய்து வரும் இந்த மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள தோட்டக்கலை பயிர்களான கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுஉள்ள விவசாயிகளுக்கு இந்த மழை சிறப்பானதாக அமைந்துள்ளதாக கூறியுள்ளனர். 

மேலும் கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகள் இந்த குளிர்ந்த சூழ்நிலையையும் , சா ரல் மழையையும் ரசித்துச் சென்றார்கள். கொடைக்கானலில் வறண்டு இருந்த நீர்வீழ்ச்சிகளில் நீர் கொட்ட ஆரம்பித்து உள்ளது. இந்த மழை மேலும் சில நாட்களுக்கு தொடரும் என்று வானிலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க    | இனி இரவில் பெண்கள் பயணிக்க பயம் இல்லை...புதிய திட்டத்தை உருவாக்கியது காவல்துறை...!