இனி இரவில் பெண்கள் பயணிக்க பயம் இல்லை...புதிய திட்டத்தை உருவாக்கியது காவல்துறை...!

இனி இரவில் பெண்கள் பயணிக்க பயம் இல்லை...புதிய திட்டத்தை உருவாக்கியது காவல்துறை...!

Published on

இரவில் தனியாக பயணிக்க அச்சப்படும் பெண்களுக்காக தமிழ்நாடு காவல்துறை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 


நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, அதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பெண்களின் பாதுகாப்புக்காகவும் அரசும், காவல்துறையும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏற்கனவே, பெண்களின் பாதுகாப்புக்காக காவலன் ஆப் செயல்முறையில் உள்ளது. 

இதன் ஒரு பகுதியாக தற்போது, பெண்கள் பாதுகாப்புக்காக புதிய திட்டம் ஒன்றை காவல்துரை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து தமிழக காவல்தூறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

சென்னையில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பு நலன் கருதி காவல் வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில்1091, 112, 044-23452365, 044-28447701 ஆகிய உதவி எண்களை பெண்கள் தொடர்பு கொண்டால், ரோந்து பணியில் இருக்கும் காவல் வாகனங்கள், அவர்கள் இருக்கும் இடத்திற்கே வந்து அழைத்துச் செல்லும் எனவும் தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com