தமிழ்நாட்டில் பாலப்பணிகள் விரைந்து முடிக்க வேண்டும்...அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்!

தமிழ்நாட்டில் பாலப்பணிகள் விரைந்து முடிக்க வேண்டும்...அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்!

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பாலப்பணிகள் முன்னேற்றம் குறித்து அனைத்து கண்காணிப்பு பொறியாளர்கள் மற்றும் கோட்டப் பொறியாளர்ளுடன் நெடுஞ்சாலை ஆராய்சி நிலைய வளாகத்தில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.


​தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் ஆயிரத்து 281 தரைப்பாலங்கள்  2026-ஆம் ஆண்டுக்குள் உயர்மட்ட பாலங்களாக மாற்றப்பட வேண்டும் என்ற முதலமைச்சரின் ஆணைக்கேற்ப தற்போது நடைபெற்று வரும் பாலப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வினை அமைச்சர் எ.வ.வேலு மேற்கொண்டார்.

இதையும் படிக்க : ஒருநாள் கால தாமதமா...! இந்திய வானிலை மையம் திடீர் அறிவிப்பு!!

அப்போது பேசிய அவர், “களத்தில் முதல்வர்” திட்டத்தின் கீழ் வேலூர், சேலம், மதுரை மற்றும் விழுப்புரம் ஆகிய மண்டல ஆய்வு கூட்டங்களில் நெடுஞ்சாலைத் துறையின் கீழ் நடைபெற்று வரும் பாலப்பணிகள் விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.