தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட மகா சிவராத்திரி...!

தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட மகா சிவராத்திரி...!

தமிழ்நாடு முழுவதும் சிவ ஆலையங்களில் மஹா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று மாலை 6 மணி முதல் தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் கொண்டாட்டம் களைக்கட்டியது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு குரு காசி விஸ்வநாதர் ஆலையத்தில், நடைபெற்ற பூஜையில், சிவனடியார்கள் பதிகங்களை தமிழில் பாடி சிவனை வழிபட்டனர். 

அதேபோல, மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆக்கூரில் உள்ள தாந்தோன்றீஸ்வரர் கோயில், நல்லூரில் உள்ள செவ்வாய் தோஷ பரிகார ஸ்தலமான மங்கள பரமேஸ்வரர் கோயில், புகழ்பெற்ற மாயூரநாதர்  கோயிலிலும், மகா சிவராத்திரி கோலாகலமாக நடைபெற்றது. 

இதையும் படிக்க : மதுரை வந்தடைந்தார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு...!

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கிளிஞ்சல்மேடு மன்மதன் கோயிலில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து  கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

தென்னிந்தியாவின் உயரமான சிவன் சிலையை கொண்ட புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் சிவன் கோயிலில், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.