’’அண்ணாமலைக்கு விரைவில் வக்கீல் நோட்டீஸ்’’ கனிமொழி உறுதி!

’’அண்ணாமலைக்கு விரைவில் வக்கீல் நோட்டீஸ்’’ கனிமொழி உறுதி!

சொத்துகுவிப்பு பட்டியல் வெளியிட்டது தொடர்பாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு விரைவில் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்படும் என எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில் நடைபெறவிருக்கும் புத்தக திருவிழா மற்றும் நெய்தல் கலைவிழா குறித்த முன்னேற்பாடு பணிகளை எம்பி கனிமொழி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  கலைத்திருவிழாவில் கலைகள் மட்டுமின்றி நமது பாரம்பரிய உணவு வகைகளை அறிந்துகொள்ளும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். 

இதையும் படிக்க : விரைவில் டிஎன்பிஎஸ்சி தலைவராகும் சைலேந்திரபாபு?

மேலும் ஆதிச்சநல்லூர், கொற்கை, வசவப்பபுரம், பறம்பூரில் கிடைத்த முதுமக்கள் தாழி மட்டுமல்லாமல் பண்டைய தமிழ் வரலாறு குறித்து கண்காட்சி அமைக்கப்பட உள்ளதாகவும் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், அண்ணாமலை வெளியிட்ட சொத்துகுவிப்பு பட்டியல் தொடர்பாக அமைச்சர்கள் அனுப்பும் நோட்டீஸ் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, தமிழக அமைச்சர்கள் மீது சொத்துகுவிப்பு பட்டியல் வெளியிட்டது தொடர்பாக ஏற்கனவே தமிழக அமைச்சர்கள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி வரும் நிலையில், விரைவில் தானும் தனது வழக்கறிஞர் சார்பில் நிச்சயம் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்புவேன் என்று கனிமொழி எம்பி தெரிவித்தார்.