”கருணாநிதி ஜெயலலிதா இருந்தபோது உதய் மின் திட்டத்தை தமிழகத்திற்குள்  அனுமதி அளிக்கவில்லை" - தாமோ அன்பரசன்

கருணாநிதி ஜெயலலிதா இருந்தபோது உதய் மின் திட்டத்தை தமிழகத்திற்குள்  அனுமதி அளிக்கவில்லை என்றும்  கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர் தங்கமணி உதய் மின் திட்டத்தில் கையெழுத்து போட்டதால் தான் தற்போது சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்தார்.

கிண்டியில் உள்ள சிட்கோ அலுவலகத்தில் சிறு குறு நடுத்தர தொழில்நிறுவனங்களுடன் மின் கட்டண உயர்வு குறித்து  ஊராக தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்திய மின் நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். பீக்ஹவர் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு குறு தொழில் நிறுவனங்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்...

நேற்றைய வேலை நிறுத்தத்தால் சுமார் மூன்று லட்சம் தொழிலாளர்கள் வரை வேலை இழந்தனர். சுமார் 500 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அரசியல் கட்சியினர் மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என அறிக்கையை வெளியிட்டனர்.

மேலும் சிறுகுறு தொழில் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் அரசு பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் வேலை நிறுத்தம் நீடிக்கும் என தெரிவித்தனர். இந்நிலையில் தமிழக சிறுகுறு தொழில் அமைச்சர் தா.மோ அன்பரசன் மற்றும் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஆகியோர் 12 சிறு குறு தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஜவுளி, மின்பொருள் உற்பத்தி, எந்திரங்கள் தயாரிப்பு, உப பொருட்கள் தயாரிப்பு என பல்வேறு தரப்பு சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுடன் பிரதிநிதிகளிடம் அமைச்சர் மற்றும் துறை செயலாளர்கள் கிண்டியில் உள்ள சிட்கோ அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர்..அதில் தொழில்துறை செயலர் அருண் ராய், தொழில் ஆணையர் அர்ச்சனா பட்நாயக், டான்செட்கோ இயக்குனர் விசு மகாஜன் உள்ளிட்டவருடன் 12 தொழிற்சங்கத்தை சேர்ந்த பிரதிநிதிகள் 24 பேர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ அன்பரசன்,

 தமிழகத்தில் உள்ள MSME சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்..முதல்வரின் உத்தரவின் பேரில் நானும், டி.ஆர்.பி ராஜாவும் பேச்சுவார்த்தை நடத்தினோம்... 12 தொழில் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.  5 கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்வோம்...

 இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் மின்சார கட்டணம் குறைவாக உள்ளது.கருணாநிதி ஜெயலலிதா இருந்தபோது உதய் மின் திட்டத்தை தமிழகத்திற்குள் வருவதற்கு அனுமதி அளிக்கவில்லை..  ஒன்றிய அரசும், அதிமுக ஆட்சியிலும் செய்த அயோக்கியத்தனங்கள் தான் தற்போது மின் கட்டணம் அதிகரிப்பிற்கு காரணம்....

 கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர் தங்கமணி உதய் மின் திட்டத்தில் கையெழுத்து போட்டதால் தற்போது மின் கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது..அவர்கள் செய்த தவறுக்கு நாங்கள் பதில் கூறி வருகிறோம்",  என குறிப்பிட்டார்.