இந்தியாவில் தமிழ்நாடு இருக்கின்றதா? இல்லையா? எங்களின் அடையாள அட்டைகளை ஒப்படைக்கிறோம்...! மாணவர்கள் வேதனை...!

இந்தியாவில் தமிழ்நாடு இருக்கின்றதா? இல்லையா?   எங்களின் அடையாள அட்டைகளை ஒப்படைக்கிறோம்...!  மாணவர்கள் வேதனை...!

22 ஆண்டுகளாக தங்களை தெற்கு ரயில்வே புறக்கணித்து வருவதாக ரயில்வேயில் பயிற்சி முடித்த மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ரயில்வே துறை தங்களுக்கு பணி வழங்காமல் புறக்கணிப்பு செய்வதாக தெற்கு ரயில்வேயில் பயிற்சி முடித்த சுமார் ஐந்தாயிரம் பேர் தலைமைத் தேர்தல் அதிகாரி
 சத்ய பிரத சாஹூவிடம் தங்களின் குடியுரிமையைக் கொடுப்பதற்காக வந்திருந்தனர். 

அப்போது பேசிய மாணவர் ஒருவர், ரயில்வேயில் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமனம் வழங்கலாம் என்ற ஆணையை ரயில்வே மண்டலங்களில் அளித்தும் இதுவரை பணி வழங்கப்படவில்லை என வேதனை தெரிவித்தார். மேலும் அவர், 

இந்தியாவில் தமிழ்நாடு இருக்கின்றதா? இல்லையா?

இந்தியாவில் ரயில்வே துறையின் மூலம் அளிக்கப்படும் விதிகள் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் அது  தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏன் செல்லுபடி ஆகவில்லை என்றும் இந்தியாவில் தமிழ்நாடு இருக்கின்றதா? இல்லையா? என்று கேள்வி எழுப்பினார் ... 

தொடர்ந்து,  தமிழ்நாடு முழுவதும் ஒரு மாவட்டத்திற்கு 150 பேர் வீதம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்தும் சுமார் 5000 பேர்  தலைமை தேர்தல் அதிகாரியான சத்ய பிரதா சாகு விடம் குடியுரிமையை கொடுக்க வந்துள்ளோம் என்று கூறினார்.  மேலும், 1996 முதல் பணிநியமன ஆணை வழங்கலாம் என்று ஆனை உள்ளது ஆனால் இதுவரை இந்தியாவில் உள்ள 18 மண்டலங்களில் 17 மண்டலத்தில் முழுவதுமாக வேலை கொடுத்துள்ளதாகவும் மேலும் தொடர்ந்து பேசிய அவர் தெற்கு ரயில்வே எங்களை முழுவதுமா புறக்கணித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினர்... 

 இதையும் படிக்க:... புதுக்கோட்டையின் கடைசி இராணியார் மறைவு...!!

இதனை தொடர்ந்து பேசிய அவர் இந்தியாவில் ரயில்வே துறையின் மூலம் அளிக்கப்படும் விதிகள் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் அது ஏன் தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏன் செல்லுபடி ஆகவில்லை என்றும் இந்தியாவில் தமிழ்நாடு இருக்கின்றதா இல்லையா என்று கேள்வி எழுப்பினார்... 

22 வருடங்களாக புறக்கணிக்கப்படுகிறோம்....

மேலும் தெற்கு ரயில்வேயின் மேலாண்மை இயக்குனர் மற்றும் ஐ சி எப் மேலாண்மை இயக்குனர்களிடம் மன அழுத்தம் அதற்கான பதில் கிடைக்கவில்லை என்று கூறியவர்  22 வருடங்களாக புறக்கணிக்கப்படுகிறோம் என்றும் இதனால் தமிழ்நாட்டில் பயிற்சி முடித்த 24 மாணவர்கள் இறந்துள்ளார்கள் என்று தெரிவித்தார்..
 
மேலும் பேசிய அவர் "இந்தியாவில் அனைவருக்கும் வேலை தருகிற பொழுது எங்களுக்கு மட்டும் ஏன் வேலை கொடுக்கவில்லை?",  என்று கேள்வி எழுப்பினார்.. அதனைத் தொடர்ந்து எங்களுடைய அனைத்து அடையாள அட்டைகளான ரேஷன் கார்டு, ஆதார் கார்டு போன்றவற்றை தலைமை தேர்தல் அதிகாரியான சத்திய பிரதா சாகு- விடம் ஒப்படைக்க வந்துள்ளோம் என்றும்  கூறினார்... 

 இதையும் படிக்க;... கோடை வெயில் கொளுத்துது.! கும்மாளம் போட்ட கோவில் யானை...! வைரலாகும் வீடியோ..!

இங்கே பதவி வகிக்கக்கூடிய தெற்கு ரயில்வேயின் வேளாண்மை இயக்குனர்,  இங்கே எந்த ஒரு வேலை வாய்ப்பையும் உருவாக்கி தரவில்லை என்றும் அதே இயக்குனர் தெற்கு ரயில்வேயின் சென்ட்ரல் பகுதிக்கு சென்று பணி புரியும் போது அங்கே பயிற்சி முடித்து இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருகிறார் என்று குற்றம் சாட்டினார்.. 

RRC இல் அதிகப்படியான குளறுபடிகள் நடந்துள்ளதாகவும் ஒரு மதிப்பில் பெற்றவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் 24 மதிப்பெண் பெற்ற நாங்கள் தோல்வி அடைந்துள்ளதாகவும் தெரிவித்த அவர் 1961 சட்ட படி 7 நிரந்தர பணியாளர்கள் பணிபுரியும் போது 1 தற்காலிக பணியில் ஒருவர் இருக்கலாம் என்று சட்டம் இருக்கின்றது ஆனால் அதனை அவர்கள் பின்பற்றுவதில்லை என்று கூறினார்.. 

 இதையும் படிக்க:... ஏசி கழன்று விழுந்து... ராஜீவ் காந்தி மருத்துவமனை ஊழியர் உயிரிழப்பு...!!