ஏசி கழன்று விழுந்து... ராஜீவ் காந்தி மருத்துவமனை ஊழியர் உயிரிழப்பு...!! 

ஏசி கழன்று விழுந்து... ராஜீவ் காந்தி மருத்துவமனை ஊழியர் உயிரிழப்பு...!! 
Published on
Updated on
1 min read

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மூன்றாவது மாடியில் இருந்து ஏசி கழன்று விழுந்து விபத்து ஏற்பட்டதில் ஒப்பந்த ஊழியர் உயிரிழந்தார்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீடு திட்ட பிரிவில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வரும் சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த திருநாவுக்கரசு(62) என்பவர் இன்று மதியம் பணி முடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பி உள்ளார். அப்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை கோபுரம் இரண்டில் உள்ள மூன்றாவது மாடியில் இருந்து குளிர் சாதன இயந்திரம் கழன்று அந்த வழியாக சென்றுகொண்டிருந்த திருநாவுக்கரசு தலையில் விழுந்துள்ளது. 

இதில் தலையில் பலமாக அடிபட்டதால் ரத்த வெள்ளத்தில் துடித்துடித்த திருநாவுக்கரசை உடனடியாக மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். அவசர சிகிச்சை பிரிவில் திருநாவுக்கரசுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட சூழ்நிலையில் சிகிச்சை பலன் இன்றி திருநாவுக்கரசு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாக காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com