ஆசிரியர்கள் நியமனத்தில் அரசு தாமதம் காட்டுவது ஏன்? - கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ்!

ஆசிரியர்கள் நியமனத்தில் அரசு தாமதம் காட்டுவது ஏன்? - கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ்!

பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நியமனத்தில் அரசு தாமதம் காட்டுவது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நியமனத்தில் அரசு தாமதம் காட்டுவது ஏன் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள், அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட பணிகளுக்கான ஆட்தேர்வு அறிவிப்பு நடப்பாண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

இதையும் படிக்க : ரபேல் வாட்ச் பில்க்கு அடுத்த தேதியை குறித்த அண்ணாமலை...!

ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து மூன்று மாதங்கள் நிறைவடைந்தும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் அரசாணை 149-ஐ திரும்பப் பெற்று ஆசிரியர்களை தகுதித் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்க அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.