ரபேல் வாட்ச் பில்க்கு அடுத்த தேதியை குறித்த அண்ணாமலை...!

ரபேல் வாட்ச் பில்க்கு அடுத்த தேதியை குறித்த அண்ணாமலை...!

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என தாம் ஒருபோதும் கூறவில்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, அதிமுக உடனான கூட்டணி குறித்து கட்சித் தலைமையே முடிவெடுக்கும் என குறிப்பிட்டார். விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை, அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி சந்தித்தது சம்பிரதாயமான சந்திப்பே எனவும், அப்போது கூட்டணி குறித்து இருவரும் பேசவில்லை எனவும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து கருத்து கூற விரும்பவில்லை எனவும், தனிப்பட்ட முறையில் தமக்கு எந்த தலைவர் மீதும் கோபம் இல்லை எனவும் விளக்கமளித்தார். 

இதையும் படிக்க : அம்மாவை ரொம்ப மிஸ் பண்றேன்...குட்லக் ஸ்டுடியோஸ் திறப்பு விழாவில் நடிகை ப்ரீத்தா நெகிழ்ச்சி பதிவு!

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என தாம் ஒருபோதும் கூறவில்லை என விளக்கமளித்ததோடு, தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ளதால் முதலுரையும் முடிவுரையும் தற்போது எழுத முடியாது எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பேசிய அவர், ஏப்ரல் 14-ம் தேதி திமுக-வின் ஊழல் பட்டியலையும், ரபேல் வாட்ச் பில்லையும் வெளியிடுவேன் என குறிப்பிட்ட அவர், தூய்மையான அரசியலை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக, நேற்றைய தினம் அண்ணாமலை தனது கையில் கட்டியிருக்கும் ரபேல் வாட்ச் குறித்த பில்லை சமர்ப்பித்ததாக கூறியிருந்த நிலையில், சமர்ப்பிக்காததால் இணையதளவாசிகள் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் பில் குறித்து கேள்வி எழுப்பி மீம்ஸ்களை அள்ளி தெறிக்க விட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.