அம்மாவை ரொம்ப மிஸ் பண்றேன்...குட்லக் ஸ்டுடியோஸ் திறப்பு விழாவில் நடிகை ப்ரீத்தா நெகிழ்ச்சி பதிவு!

அம்மாவை ரொம்ப மிஸ் பண்றேன்...குட்லக் ஸ்டுடியோஸ் திறப்பு விழாவில் நடிகை ப்ரீத்தா நெகிழ்ச்சி பதிவு!

இயக்குனர் ஹரி மற்றும் அவரது மனைவி இணைந்து 40 வருட பாரம்பரியமான குட்லக் திரையரங்கத்தை குட்லக் ஸ்டுடியோஸ் என்று பெயர் மாற்றி திறப்பு விழா நிகழ்ச்சியை நடத்தினர்.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் விஜய குமாருக்கு சொந்தமான 40 வருட பாரம்பரியமான குட்லக் திரையரங்கத்தின் பெயரை விஜயகுமாரின் மகள் ப்ரீத்தாவும், மருமகன் ஹரியும் இணைந்து குட்லக் ஸ்டுடியோஸ் என்று மாற்றியுள்ளனர். இந்நிலையில் இதன் திறப்பு விழா நிகழ்ச்சி சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் சூர்யா, தலைவாசல் விஜய், தமிழ்நாடு சட்டபேரவை தலைவர் அப்பாவு, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர் பாபு, தயாரிப்பாளர் எஸ்‌. ஆர்  பிரபு ஆகியோருடன் நடிகர் விஜயகுமார், நடிகைகள் ப்ரீதா, ஸ்ரீ தேவி, இயக்குனர் ஹரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 

நிகழ்ச்சிக்கு வந்த சட்டபேரவை தலைவர் அப்பாவுவை நடிகர் விஜயகுமார் அன்போடு வரவேற்று பேசினார். அடுத்ததாக நடிகர் சூர்யாவும்  சபாநாயகர் அப்பாவுவை வரவேற்று அவரிடம் பேசிக் கொண்டு இருந்தார். பின்னர் நடிகர் சூர்யா, சட்டபேரவை தலைவர் அப்பாவு ஆகியோர் முன்னிலையில் குட்லக் ஸ்டுடியோஸ் திறந்து வைக்கப்பட்டது. 

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஜயகுமார், 40 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் குட்லக் தியேட்டரை ஆரம்பித்து, எல்லாருக்கும் குட்லக் ஆக இருக்க வேண்டும் என்பதற்காக குட்லக் தியேட்டர் என்று பெயர் வைத்தேன். ஆனால், தற்போது இந்த குட்லக் தியேட்டர் பெயரை மாற்றி எனது மருமகனும் மகளும் அதே பெயரில் ஸ்டுடியோவாக துவக்கி உள்ளதாகவும் கூறினார். இந்த ஸ்டுடியோ இன்னும் பல ஆண்டுகள் இருந்து திரை / கலைத் துறைக்கு சேவை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

இதையும் படிக்க : குருத்தோலை ஞாயிறு இன்று கோலாகல கொண்டாட்டம்...ஊர்வலமாக சென்ற கிறிஸ்துவர்கள்!

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் ஹரி, குட்லக் பிரிவியூ தியேட்டர் என்பது 40 வருடங்களுக்கு முன் பல முதலமைச்சர்கள் படம் பார்த்த இடம், அதனால் அந்த பிராண்ட் பெயரையே வைக்க வேண்டும் என்று எண்ணி, குட்லக் ஸ்டுடியோவாக பெயர் மாற்றி உள்ளோம். சினிமாவுக்கு முக்கியமான இடங்கள் என்றால் அது கோடம்பாக்கம், வடபழனி, சாலிகிராமம் தான், எனவே அந்த ஏரியாவில் நாம் சினிமாவில் இருந்ததற்கான அடையாளமாக ஒரு நிறுவனத்தை துவக்க வேண்டும் என்று நினைத்து தற்போது இதை துவங்கியிருப்பதாக கூறினார். பிறகு சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த அவர், அடுத்த படம் குறித்து இன்னும் 10 நாட்களில் அறிவித்து விடுவேன் என்று சில அப்டேட்டையும் கொடுத்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை ப்ரீதா, மிக மிக முக்கியமான, சந்தோஷமான நாள் இன்றைக்கு,  கனவு நனவானது என்றும் கூட சொல்லலாம். குட்லக் ஸ்டுடியோஸ் எங்களுக்கு குழந்தை மாதிரி. குட்லக் என்ற பெயர் 40 வருடத்துக்கு முன் அப்பா துவங்கியது. அதை நாங்கள் திரும்பி கொண்டு வருவதில் ரொம்ப பெருமையாகவும், ஆசீர்வாதமாகவும் நினைக்கிறோம். இந்த தருணத்தில் எனது அம்மாவை ரொம்ப மிஸ் பண்ணுவதாகவும், அம்மா இருந்தா ரொம்ப சந்தோஷப் பட்டிருப்பாங்க. அவங்க அன்பு எப்போதும் இருக்கும். நீங்களும் எப்போதும் ஆதரவு தர வேண்டும் என்றும் நெகிழ்ச்சி பட கூறினார். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை ஸ்ரீதேவி, அக்காவும் மாமாவும் இணைந்து குட்லக் ஸ்டுடியோஸ் துவக்கியுள்ளது ரொம்ப மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார். இந்த பெயர் எங்கள் குடும்பத்துக்கு ரொம்ப நெருக்கமானது. 40 வருடங்களுக்கு பிறகு மீண்டும் எங்கள் குடும்பத்துக்கு அந்த குட்லக் பெயர் திரும்ப வருவது என்பது பெருமையான விஷயம் என்று கூறினார்.