அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கண்களை கருப்புத் துணியால் கட்டி நூதன போராட்டம்?

கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி கல்விக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி 7வது நாளாக மாணவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கண்களை கருப்புத் துணியால் கட்டி நூதன போராட்டம்?

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது.

இந்த கல்லூரியில் தற்போது முதலாமாண்டு சேர்ந்த மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளைப் போன்று கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் இரண்டு, மற்றும்  மூன்றாமாண்டு மாணவர்களுக்கு  4 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதை குறைக்க வலியுறுத்தி மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.  7வது நாளான இன்று  கண்களை கருப்புத் துணியால் கட்டிக்கொண்டு புத்தகத்தைப் படிக்கும் நூதன போராட்டம் நடத்தினர். மேலும் இந்த மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் படும் இன்னல்களை ஊமை நாடகமாக நடித்துக் காட்டப்பட்டது.